Print Version|Feedback
US planners prepare air war on China
அமெரிக்க திட்டமிடுவோர் சீனா மீது வான் போருக்கு தயாரிப்பு
By Peter Symonds
7 July 2016
அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட மிட்செல் நிறுவனத்தால் (Mitchell Institute) இந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று, சீனாவுடனான ஒரு முழுப் போர் நடவடிக்கைகளில் நவீனமயமான “ஐந்தாம் தலைமுறை” இரகசியமாக செயல்படும் விமானத்தை பயன்படுத்துவதற்கு அமெரிக்க விமானப்படை திட்டங்களை வழங்கி இருக்கிறது. இந்த தயாரிப்புக்கள் 2020 அளவில் இந்தப் பிராந்தியத்தில் 60 சதவீத போர்க்கப்பல்களும் விமானங்களும் தளம் கொள்வதைக் காட்சிப்படுத்தும் இந்தோ - பசிபிக் முழுவதும் மிக பரந்த அமெரிக்க இராணுவ கட்டி எழுப்பலின் ஒரு பகுதியாக இருக்கின்றன.
இந்த அறிக்கையின் ஆசிரியர்கள் அமெரிக்க விமானப்படை அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள்,–குறிப்பாக F-22 ராப்டார் மற்றும் F-35 விமானத்தின் பல்வேறு வடிவங்கள் உள்பட, ஐந்தாம் தலைமுறை விமானத்தை களம் இறக்குவது உள்பட மூலோபாய திட்டமிடலில் நேரடியாக ஈடுபட்டுள்ளவர்கள் ஆவர். மேஜர் ஜெனரல் ஜெஃப் காரிஜியன் பெண்டகனில் விமானப்படை F-35A ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் தற்போதைய தலைவரும் நடவடிக்கைகளில் உதவி துணை தலைமை தளபதியாக முன்னர் சேவை செய்தவருமாவார். கேர்னல் Max Marosko ஒரு F-22 விமானியும் ஹவாயில் பசிபிக் ஆணையகத்தில் விமான மற்றும் சைஃபர் ஸ்பேஸ் நடவடிக்கைகளில் துணை இயக்குநரும் ஆவார்.
“ஐந்தாம் தலைமுறை வான் மோதல்: கூட்டுப்படை அனுகூலத்தை பராமரித்தல்” என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையில், இந்த விமானங்கள் “21ம் நூற்றாண்டில் அமெரிக்க பலத்தைக் காட்டுவதில் ஒரு முக்கிய கூறாகும்” என்று அறிவித்தது. F-22 மற்றும் F-35 விமானங்கள் நுணுகி கண்டு பிடிப்பதிலிருந்து தப்ப மட்டுமல்ல நவீன போர் முறையில் இணையற்ற வகையில் ஒரு மோதலின் சூழ்நிலைமை பற்றிய விழிப்பைத் தரவல்லது மற்றும் விமானம் மற்றும் செயலாற்றும் மற்றைய செயற்களங்களில் இயல்திறன்களையும் ஒரு உயர் மட்டத்தில் இருக்கக் கூடியதாக ஆக்கும் அழிவுக் கருவிகளையும் வழங்குகின்றது.”
இப் போர் விமானங்கள் உணர்திறன்களால் நிரப்பப்பட்டுள்ளன மற்றும் குறைந்த அளவே முன்னேற்றம் கொண்ட நான்காம் தலைமுறை விமான ஓட்டிகளை ஒப்பு நோக்க தங்களது விமான ஓட்டிகளுக்கு மாபெரும் “சூழ்நிலை விழிப்புணர்வை” அளிக்கக்கூடிய முன்னேறிய மின்னணுவியலைக் கொண்டுள்ளன. F-22, F-35 விமானங்கள், “மிகவும் சக்தி மிக்க தற்போதைய வான் மற்றும் நில அச்சுறுத்தல்கள், மற்றும் முன் கணிக்கக்கூடிய, எதிர்காலத்திற்கானதில் செயல்படக்கூடியது என அறிவுபூர்வமாக எதிர்பார்க்கக்கூடிய இருப்பால் வடிவமைக்கப்பட்ட உயர் போட்டி கொண்ட மோதல் சூழ்நிலைகளில்”, அவர்களை சக்திமிக்க வகையில் செயல்பட செய்வதற்கு பகைவரின் பாதுகாப்பு அமைப்புக்களை சிதைக்க வல்லவை மற்றும் குழப்பக்கூடியவை.
வான் வழி மோதும் கட்டளை தலைமைத் தளபதி Herbert “Hawk” Carlisle, F-22 ஒரு தசாப்தத்திற்கும் முன்னதாக செயற்படக்கூடியாக ஆகியிருந்தது, “எமது எதிர்பார்ப்புக்களை எல்லாம் தாண்டிக்கூட சென்றிருக்கிறது” என்று கடந்த ஆண்டு அறிவித்தார். ஐந்தாம் தலைமுறை விமானங்கள், “எமது நாடுநடத்தும் போர்களில் வெற்றிபெறத் தேவையான எதிலும் அடையாளப்படுத்த முடியாத சாகத்தை அமெரிக்காவுக்கு தருகிறது என்று பீற்றிக் கொண்டார்.
2013 ஜூலை அன்று, வெளிநாட்டுக் கொள்கை இதழ் “சிங்கப்பூரில் உள்ள Changi East விமானப்படைத் தளம், தாய்லாந்தில் உள்ள Korat விமானப்படைத் தளம், இந்தியாவில் ஒரு பகுதி மற்றும் பிரிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் Kubi Point மற்றும் சாத்தியமான வகையில் Puerto Princesa தளங்கள், வட ஆஸ்திரேலியா உள்பட, ஆசியா முழுவதும் அமெரிக்க போர்விமானங்களையும் ஆட்களையும் கட்டி எழுப்புவதற்கான Carlisle-ன் திட்டங்களைப் பற்றி செய்தி அறிவித்தது. “அக்கட்டுரை பசிபிக்கில் வடமரியானாவில் உள்ள Tinian தீவு போன்ற பழமையான இரண்டாம் உலக யுத்த தளங்கள் புத்தமைத்தல் நிகழ்வுப்போக்கில் இருந்தன என்றும் கூட சுட்டிக்காட்டியது.
விமானப் படையானது பசிபிக்கில் F-22 கள், F-35 கள் மற்றும் B-2 இரகசியமாக குண்டுவீசும் விமானங்கள் உள்பட அதன் “மிகவும் திறன்கொண்ட இயங்குதளங்களை பயன்படுத்தும்” என Carlisle கூறினார். F-35 க்கான முதலாவது நிரந்தரப் படை இறங்கு தளம் ஆசியாவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மிட்செல் நிறுவன அறிக்கையானது, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் போரில் எப்படி ஈடுபடுத்தப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் என்று பெரிய அளவில் விவரிக்கிறது. சீனா பெயர் குறிப்பிடப்படாத நிலையிலும், அதுதான் பிரதான எதிரியாக இருக்கும் என எவரும் எவ்வித ஐயமும் கொள்ள முடியாது. “அனுகூலத்தைப் பற்றிக்கொள்ளல்” என தலைப்பிடப்பட்ட பகுதியில் அறிக்கையானது 2026ல் வகுக்கப்படும் ஒரு போர்க்காட்சி பற்றி கோடிட்டுக் காட்டியது, அதில் F-22, F-35 விமானங்கள் இப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள “பல்வேறு இராணுவ மற்றும் சிவிலியன் விமான தளங்களுக்கு” விரைந்து பரவும், எனவே பகைவர் “அதிர்ச்சிதரும்” தாக்குதலை அவற்றுக்குக் கொடுக்க முடியாது.
“மோதுகின்ற நடவடிக்கைகள் தொடங்கியதும், அமெரிக்க இராணுவ ஐந்தாம் தலைமுறை விமானம், கூட்டணி நாடுகளிலிலிருந்து வரும் F-35 வழியாக நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டத்தில் சக்திமிக்க வகையில் ஒருங்கிணக்கும் மற்றும் கூட்டாகச் செயற்படும்” என்று அறிக்கை விளக்குகின்றது. “போட்டி மிக்க எல்லைப் புறங்களிலிருந்தும் வரும் விமானங்கள் மோதுகையில் வான் மேலாதிக்கத்திற்காக யுத்தத்தின் மீது போராடலைக் குவிமைப்படுத்தும்… நடவடிக்கைகள் தொடர்கையில், நிறைந்த எண்ணிக்கையில் சாதகமாய் இயங்கும் முன்னேறிய வகையிலான வெளியிலிருந்து வானுக்கு (SAMs) ஏவுகணைகளை கொண்டு செல்லக்கூடியதன் காரணமாக இந்த மோதலில் போட்டி மிக்க பகுதியில் செயல்படக்கூடிய ஒரே விமானம் F-22, F-35, B-2 மற்றும் B-21 ரக விமானங்கள் போன்றவை இரகசியமாக செயல்படும் விமானங்களாக மாறுவது வெளிப்படை……
“மோதல் தொடர்கையில், ஐந்தாம் தலைமுறை விமானம் போட்டிமிக்க எல்லைப் பகுதிகளில் உள்ள சாம் ஏவுகணைகளை கீழ்ப்படுத்தி அழிக்கும், மிகவும் புதிய மிதமான நிலையை உருவாக்கும். இது பாரம்பரிய விமானங்களை (பழையன) தங்களின் ஐந்தாம் தலைமுறை விமானங்களோடு செயல்படுவதை சாத்தியமாக்கும். நான்காம் மற்றும் ஐந்தாம் தலைமுறை விமானங்களின் ஒருங்கிணைதல் பக்குவம் மற்றும் முழு செயல்பாட்டுத் திறன்கள் மோதலில் திருப்புமுனையை நிரூபிக்கும்.”
இக்காட்சியானது ஆசியா பசிபிக்கில் கூட்டாளிகள் மற்றும் மூலோபாய பங்காளர்களின் முக்கிய பங்கை தெளிவுபடுத்துகிறது, அமெரிக்க விமானப் படைக்கு விமான தளங்களை கிடைக்கச்செய்வது மற்றும் தரையிலிருந்து ஆதரவு மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் தங்களின் சொந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுடன் சேர்ந்து, மோதும் நடவடிக்கையை மேற்கொள்வதில் அமெரிக்காவுடன் இணைந்து கொள்ளும். ஒட்டுமொத்தத்திலும் அறிக்கையானது, நெருக்கமான ஒருங்கிணைப்பை மற்றும் தங்களின் இராணுவங்கள் சீரானவகையில் ஒன்று சேர்ந்து வேலைசெய்வதை உறுதிப்படுத்தும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு, இடையில் தொடர்ச்சியான போர்பயிற்சி உள்பட, கணினிகளிலிருந்தும் இணைந்து தகவல்களை பரிமாறக்கூடிய தேவையை, வலியுறுத்துகிறது.
இந்த அறிக்கையானது ஐந்தாம் தலைமுறை விமானங்களை பராமரிப்பதிலும் பழுதுபார்ப்பதிலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான பின்புலத் தளத்தை அளிப்பதில் வட ஆஸ்திரேலியாவின் விமானத் தளங்களின் முக்கிய பங்கை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது. அக்காட்சி அறிவிப்பதாவது: “ஒரு எடுத்துக்காட்டில், அமெரிக்க விமானப்படை F-35 விமானம் பறப்பதில் ஏற்படும் கோளாறு அதனை அதன் சரியான மூல இடத்திற்கு திரும்ப முடியாது செய்த பின்னர், ஆஸ்திரேலிய F-35 விமான தளத்தில் சரி செய்யப்பட நிர்பந்திக்கப்படும். ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையின் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள், அமெரிக்க பராமரிப்பு மற்றும் மறுஉற்பத்தி பயிற்சிகளை ஒத்த வகையில் அமெரிக்க விமானப்படை F-35 விமானத்தை விரைவில் பழுது பார்க்கும், மீளாயுதப்படுத்தும், மற்றும் எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டிருப்பர். கேள்விக்குள்ளான F-35 விமானம் அடுத்த நாள் போரிடும் நடவடிக்கையில் மீண்டும் சேர்ந்து கொள்ளும்.”
இக்காட்சியானது, சீன பிரதான நிலத்தில் இரகசியமாக செயல்படும் போர் விமானங்களால் முன்னெடுக்கப்படும் ஆஸ்திரேலியா போன்ற கூட்டாளிகளுடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பில் ஈடுபட்டு செய்யும் பெரும் விமானத் தாக்குதலுக்கு குறையாத எதற்குமான விளக்கம் அல்ல. சீனாவுடன் போரிடுவதற்கான பெண்டகனின் வான், கடல் போர் மூலோபாயத்தின் ஒரு கூறு, ஓயாத வான் தாக்குதலாகும். இராணுவ தளங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து சீன இராணுவ தொலைத்தொடர்புகள், ஆணையக மையங்கள் மற்றும் முக்கிய தொழிற்துறைப் பகுதிகள் பெரும்பாலானவற்றை அழிக்கும் நோக்கம் கொண்ட சீன பிரதான நிலப்பகுதியை தாக்கும் கூடுதல் சேர்க்கையாக விமானத் தாக்குதல்கள் இருக்கும். வான், கடல் யுத்தம் சீனப் பொருளாதாரத்தை நெரிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கடற்படை முற்றுகையையும் காட்சிப்படுத்துகிறது.
மிட்செல் நிறுவனத்தின் இந்த அறிக்கை, சீனாவுடனான போருக்கான அமெரிக்க தயாரிப்புக்களின் முன்னேறிய தன்மையை கோடிட்டுக்காட்டுகிறது. இக்காட்சி ஒரு தசாப்தகாலத்திற்கும் முன்பே வகுக்கப்பட்ட அதேவேளை, அறிக்கை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் பல, —கூட்டுப் பயிற்சி, எண்ணிறைந்த விமான தளங்களைப் பெறல், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் நவீன விமானங்களை, போர்க்கப்பல்களை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலை நிறுத்தல் ஆகியன— ஏற்கனவே நன்கு முன்னெடுக்கப்படுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப்பிராந்தியம் முழுவதும் அளவிடமுடியாத பதட்டங்களை உக்கிரப்படுத்திக்கொண்டு, இந்தப் பிராந்தியத்து முக்கிய புள்ளியில் ஏற்படும் எந்த நிகழ்வையும் தனக்கு சாதமாக எடுத்துக்கொள்ள அமெரிக்கா உறுதியாக உள்ளது, அமெரிக்க நலன்களுக்கு சீனாவைக் கீழ்ப்படியச்செய்யும் அதன் நோக்கங்களை முன்னெடுப்பதற்கு, அது ஏற்கனவே வேண்டுமென்றே எரியூட்டப்பட்டுள்ளது.