Print Version|Feedback
French government seeks delay in order to impose unpopular labour reform
பிரெஞ்சு அரசாங்கம் செல்வாக்கற்ற தொழிலாளர் சீர்திருத்தங்களை திணிப்பதற்கு தாமதம் செய்கிறது
By Kumaran Ira
30 March 2016
இளைஞர்கள் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தம், எல் கொம்ரி சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் மனுவில் மில்லியன் கணக்கானோர் கையெழுத்திட்ட பின்னர், பிரெஞ்சு அரசாங்கமானது, செல்வாக்கற்ற தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தை திணிப்பதை தாமதப்படுத்துகிறது. அது ஆரம்பத்தில் மார்ச் 9ல் முன்வைக்கப்பட இருந்தது, ஆனால் தொழிலாளர் அமைச்சர் மரியம் எல் கொம்ரி தேசிய சட்டமன்றத்தில் நேற்றுதான் வைத்தார், இதுதொடர்பான பாராளுமன்ற விவாதம் மே3 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் சூழ்ச்சித்திறனின் நோக்கம், போலீஸ் வன்முறையையும் வரவிருக்கும் பள்ளி விடுமுறைகளின் தாக்கம் இவ்விரண்டையும் பயன்படுத்தி, சீர்திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்புகளை நீடிக்கவைத்து, சீர்திருத்தத்தை அமல்படுத்துவதை காலதாமதப்படுத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் மாணவர் சங்க அதிகாரத்துவத்துடனும் வேலைசெய்வதாகும்.
அதிகரித்துவரும் கோபத்திற்கு இடையில், மாணவர்களால் நடத்தப்படும் எதிர்ப்புக்களையும் முற்றுகையையும் முறியடிப்பதற்கு அரசாங்கம் நகர்ந்துகொண்டிருக்கிறது. மார்ச் 24 எதிர்ப்புக்களின்போது, பெரிய நகரங்களில் உள்ள கலவர தடுப்பு போலீஸ் மாணவர்களை தாக்கியது மற்றும் 40 எதிர்ப்பாளர்களை கைதுசெய்தது. பதினைந்து மாணவர்கள் பாரிசில் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஒன்பது மாணவர்கள் மேற்கு நகரமான நான்ந் இல் கைதுசெய்யப்பட்டனர். கடந்த வாரத்தின் பொழுது, போலீஸ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி சில மாணவர்களை கைது செய்தது. சில மாணவர்கள் அபராதம் விதிக்கப்பட்டனர் மற்றும் ஒரு ஆறுமாத காலத்துக்கு இடைநிறுத்திய தண்டனையும் பெற்றனர்.
பாரசில் உள்ள ஹென்றி பேர்க்சன் பள்ளிக்கு அருகில், போலீஸ் அதிகாரி ஒரு மாணவரின் முகத்தில் குத்துவதை ஒரு காணொளி காட்டியது. BFM-TV க்கு அளித்த சாட்சியின் கூற்றுப்படி, “பொலீஸ் 15 வயது உயர்நிலைப் பள்ளி மாணவனை அவர் கண்ணீர்ப்புகை மண்டலத்தில் இருந்து விலக முயற்சிக்கையில் கைது செய்ய முயற்சித்த பொழுது, பொலீஸ் தாக்கியது.”
PS அரசாங்கத்தால் காலதாமதப்படுத்தப்படுவது ஒரு சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சித்திறனாகும்: மசோதாவில், அடிப்படையில் ஒரு மாற்றமும் இல்லை. எல் கொம்ரி சட்டத்தில் உள்ளடங்கிய முக்கிய நடவடிக்கைகள் பிரான்சின் தொழிலாளர் விதிமுறைகளை மீறும் ஒப்பந்தங்களை தொழிற்சங்கமும் நிர்வாகமும் தனிப்பட்ட நிறுவனங்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதித்தல்; வேலை வாரத்தை நீட்டல்; பரந்தளவில் வெளியேற்ற வசதிசெய்தல்; புதிதாக வேலைக்கு அமர்த்தப்படும் இளம் தொழிலாளர்களுக்கான வேலைப்பாதுகாப்பை கீழறுத்தல் ஆகியவை உள்ளடங்கும்.
சட்டவிரோத பரந்த வெளியேற்றலுக்கான அபராதங்களின் உயர்மட்டங்களை நிர்ணயிக்காமல் சமரசம் செய்யும் என PS குறிகாட்டும் அதேவேளை, மசோதாவின் முக்கிய கூறுகள் அப்படியே உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாளர் விதியை மீறும் ஒப்பந்தங்களை பேசுவதற்கான - வளர்ந்துவரும் பொருளாதார இறக்கத்திற்கு மத்தியில், தொழிலாள வர்க்கத்தின்மீது பரந்த தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் இந்த நடவடிக்கையை- பற்றிப் பேசுவதற்கான தொழிற்சங்கத்தின் திறனை அது இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
மார்ச் 24ல் வெளியிடப்பட்ட Le Parisien மற்றும் France Info க்கான Odoxa வாக்கெடுப்பின்படி, 71 சதவீத மக்கள் தொழிலாளர் சட்டத்தின் சீர்திருத்த வரைவை இன்னும் எதிர்க்கின்றனர், இது மசோதாவின் முதலாவது பதிப்புக்கானது போலவே அதே விகிதாசாரத்தில் இருக்கிறது.
மசோதாவை எதிர்க்கும் இளைஞர்களுக்கான முக்கிய பிரச்சினை தற்போது ஐரோப்பாவை அடித்துச்செல்லும் சிக்கன பொருளாதாரக் கொள்கைக்கு உந்துதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் இவற்றைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சக்தியான தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலைப்படுத்த வேண்டும். போராட்டமானது தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் சங்க கூட்டணிகள் இவற்றின் கைகளில் இருந்து எடுக்கப்பட்டாக வேண்டும் மற்றும் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் PS இலிருந்து சுயாதீனமாக, சிக்கனப் பொருளாதாரக் கொள்கை, யுத்தம், மற்றும் நெருக்கடிநிலை ஆகியவற்றுக்கு எதிரான ஒரு பரந்த போராட்டமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
தொழிற்சங்கங்கள், இடது முன்னணி மற்றும் முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற PS இன் இதர அரசியல் துணைக்கோள்கள், பிரெஞ்சு அரசால் திணிக்கப்படும் அவசரகால நிலையையும் யுத்தத்தையும் ஆதரிக்கின்றனர், ஆயினும் அவர்கள் PS இன் சீர்திருத்தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திரும்பத்திரும்ப உதவுகின்றனர்.
ஹாலண்ட் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பிரெஞ்சு கார் தயாரிப்பாளரான PSA Peugeot Citroën ஒல்னே தொழிற்சாலை மூடல் மற்றும் ஏர் பிரான்ஸ் விமான ஓட்டிகள் வேலைநிறுத்தம் உட்பட போராட்டங்களை தனிமைப்படுத்தினர் மற்றும் நசுக்கினர். அவர்கள் எல் கோம்ரி சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புக்களை ஒழுங்கமைத்தனர் ஏனென்றால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபம் தங்களது கட்டுப்பாட்டை விட்டு தப்பி, வெறுப்புற்ற PS அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பரந்த இயக்கத்தை தூண்டிவிடும் என அவர்கள் அஞ்சினர். ஆயினும், அவர்கள் ஆளும் வர்க்கத்தின் குட்டிமுதலாளித்துவ கருவிகளாக இருக்கின்றனர், அது அவர்களுக்கு அவர்களின் 4 பில்லியன் யூரோக்களின் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் 95 சதவீதத்தை அவர்களுக்கு அளிக்கின்றனர்.
இளைஞர்களை கட்டாயம் எச்சரித்தாக வேண்டும்: போராட்டமானது தொழிலாள வர்க்கத்திற்குள் எந்த ஆதரவு அடித்தளமும் இல்லாத இந்த அமைப்புக்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து இருக்கும் மட்டத்திற்கு, எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு விடும். உண்மையில், மசோதாவுக்கு எதிர்ப்பானது ஆபத்தான வகையில் பலவீமடைந்துள்ளது என ஊடகம் மற்றும் அரசு அதிகாரிகள் ஊக்குவிப்பதன் மூலம் எதிர்ப்பாளர்களை சோர்வடைய செய்வதற்கு முயற்சிக்கும் ஒரு சிடுமூஞ்சித்தனமான பத்திரிகைப் பிரச்சாரத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.
பிரான்ஸ் முழுவதும் நடந்த மார்ச் 24 மாணவர் எதிர்ப்புக்களைத் தொடர்ந்து, லு மொண்ட் குறிப்பிட்டது, “உயர்நிலை பள்ளிகள் முற்றுகை எண்ணிக்கை கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருக்கிறது. பிரான்சில் 2500 பொதுத்துறை நிறுவனங்களில் 57 ஐ பாதித்துள்ளது, அது மார்ச் 17 அன்று நடந்த முந்தைய அணிதிரளலின் பொழுதான எண்ணிக்கையில் அரைப் பகுதி ஆகும் என்று கல்வி அமைச்சகம் கூறுகிறது.”
RTL வானொலி எழுதியது, பிரான்சுவா ஹாலண்டை பொறுத்தவரையில், பல்வேறு எதிர்ப்புக்களையும் தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட பின்னர், புயல் கரையைக் கடந்துவிட்டது” அது அரசாங்க தகவலை மேற்கோள்காட்டி, ”நாங்கள் தீயை அணைத்துவிட்டோம்” என்றது.
அது, “விடயங்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக எல்லாம் கூறுகின்றன” என்று அமைச்சர்கள் கூறியதை மேற்கோள்காட்டி, “இளைஞர்கள் பரந்த அளவில் அணிதிரளல் என்பது இனியும் இருக்கும் என அரசாங்கத்தில் எவரும் நம்பவில்லை” என முடித்தது.
இது தொழிற்சங்கங்களின் சோர்வடைந்த பிரச்சாரத்தின் மூலம் எதிரொலித்தது. மசோதாவின் எதிர்ப்பாளர்கள் என, தொடர்ந்து தம்மை காட்டிக்கொள்ளும் அதேவேளை, அவர்கள் போலீஸ் வன்முறையை கண்டனம் செய்யவில்லை அல்லது அவசரகால நிலைக்கு எதிராக எதிர்ப்பை அணிதிரட்ட நாடவில்லை. அவர்கள் அழைப்பு விடுத்த எதிர்ப்புக்களின் மீது வெறுமனே அரசியல் கட்டுப்பாட்டை பராமரிக்க மட்டுமே விழைந்தனர், ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லையானால், எதிர்ப்பானது எப்படியும் சீர்திருத்தத்திற்கு எதிராக வெடிக்கும் என அவர்கள் அஞ்சினர்.
தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) மற்றும் இதர தொழிற்சங்கங்கள் சந்தித்து மார்ச் 31 அன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. அது இயக்கத்தை வீழ்த்துவதற்கு வழி அமைத்தது. அவர்களின் அறிக்கை, மார்ச் 31 நடவடிக்கைக்கு பின்னர், அரசாங்கம் கட்டாயம் பதில்கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், கையெழுத்திட்டவர்கள் வரும் நாட்களில் நடவடிக்கையை தொடர்வதா என விவாதம் நடத்துவதற்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் ஊடாக அணிதிரளலை வலிமைப்படுத்துவதற்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அழைப்பார்கள்.” என்கிறது
இது ஒரு பிற்போக்கு மோசடியாகும். என்னென்ன சிறு மாறுதல்களை அறிமுகப்படுத்துமாறு நிர்பந்திக்கப்படுவதாக அது உணர்ந்தாலும், PS எல் கொம்ரி சட்டத்தை அழுத்தமாக முன்னெடுத்துச் செல்லும். PS க்கு சணாகதி ஆவதா இல்லையா என ‘விவாதிப்பதற்கு’ தொழிற் சங்கத்தின் அழைப்பு என்பது, எதிர்ப்புக்களை வீழ்த்துவத்ற்காக நெருக்கும் PS மற்றும் ஊடக பிரச்சாரத்துடனான தங்களின் அணிசேர்க்கையை மறைப்பதற்கான ஒரு சிடுமூஞ்சித்தனமான சாதுரியம் ஆகும். PS-ன் சட்டவிரோத பிற்போக்கு சீர்திருத்தங்களை ஒரு “ஜனநாயக விவாதத்தின் பகுதி என வைப்பதற்கான அத்தகைய முயற்சிகளை இளைஞர்களும் தொழிலாளர்களும் கட்டாயம் நிராகரிக்க வேண்டும்.
ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் செல்வாக்கானது ஒரு புதிய சான்றாக கீழ்நிலைக்கு அமிழ்ந்து போனது, இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரான மிக வெறுக்கத்தக்க ஜனாதிபதி ஆக ஆக்கியிருக்கிறது. கடந்த வாரம் தொழிலாளர் அமைச்சகம், வேலை தேடுவோர் எண்ணிக்கை 38,400 அளவில் உயர்ந்ததானது வேலையற்றோர் எண்ணிக்கையை 3.59 மில்லியன் அளவாக ஒரு சான்று மட்டத்திற்கு தள்ளியுள்ளது என்று அறிவித்துள்ளது.