Print Version|Feedback
Neo-fascist Marine Le Pen launches 2017 French presidential election bid
நவ-பாசிச மரின் லூ பென் 2017 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தை தொடங்குகிறார்
By Kumaran Ira
22 September 2016
செப்டம்பர் 17-18 அன்று, பிரான்சின் நவ பாசிச தேசிய முன்னணி (FN) ஆனது அதன் தலைவர் மரின் லூ பென் இன் 2017 ஜனதிபதி தேர்தல் செயல்பாட்டை தொடங்கி வைப்பதற்கு, மத்தியதரைக்கடல் நகரமான Fréjus இல் வருடாந்த மாநாட்டை நடத்தியது. ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்களால் பிரெஞ்சு கொடியை அசைத்து முழக்கமிட்டு வாழ்த்தை பெற்ற லூ பென், தனது துவக்க உரையில், “நாம் எமது நாட்டில் உள்ளோம்” என்றார், “மக்களின் வேட்பாளராக தான் இருப்பேன்” என்று கூறி, ஜனரஞ்சகவாத, தேசியவாத மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU) எதிர்ப்பு வேண்டுதல்களை விடுத்தார்.
அவ்வம்மையாரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சரியாக சொல்வதானால் “ஜனாதிபதி தேர்வு மாநாட்டுடன் பிப்ரவரியில் ஆரம்பமாகும்.... (மற்றும்) தொடங்கியதும் யார் போட்டியிடுகிறார்கள் என அனைத்து வேட்பாளர்களையும் அடையாளம் கண்டு விடுவோம்” என்றவாறு லூ பென் தான் முன்கூட்டிய பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதாகக் கூறினார். தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் 2017ல் தொடங்குவதற்கு 7 மாதங்களுக்கு முன்னரே அவரது பிரச்சாரத்தை தொடங்குதற்கான அனைத்து தேவையான சூழ்நிலைமைகளிலும் அவரது குழுவை வைத்திருப்பதாகக் கூறினார். “நான் தொடங்குவதற்கு மிகவும் ஆர்வமாகவும் பரபரப்புடனும் இருக்கிறேன்” என்றார் அவர்.
கருத்துக்கணிப்பு தற்போது, லூ பென் மே-இல் இறுதிச்சுற்று முடிவுக்கு எளிதில் தகுதி பெறுவார் என காட்டுகின்றன, ஆனாலும் அவர் சோசலிஸ்ட் கட்சியின் (PS) செல்வாக்கிழந்த தற்போதிருக்கும் பிரதமர் பிரான்சுவா ஹோலண்டை எதிர்கொள்ளாதிருப்பது சாத்தியமானால், இரண்டாம் சுற்றில் தோற்கடிக்கப்படுவார். சமீபத்திய தேர்தல்களில் FN, தேசிய சட்டமன்றம் மற்றும் செனெட் இரண்டிலும் இருக்கைகள் பெற்று, அதேபோல மேயர்கள் உள்ளூர் கவுன்சிலர் என நூற்றுக்கணக்கான பதவிகளைப் பெற்று குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியுள்ளது. ஹோலண்ட் இன் கீழ், FN, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக போலீஸின் பரந்த தட்டினர் மத்தியில் அதன் வாக்காளர் தளத்தை விரிவுபடுத்தி உள்ளது.
தனது குறிப்புரையில், லூபென் புலம்பெயர்தலையும் பன்முகக் கலாச்சாரத்தையும் கண்டனம் செய்ததோடு, “அடையாளம் இல்லாமல் பிரான்ஸ் இருக்காது. இறையாண்மை இல்லாமல் அடையாளம் இல்லை என்றார்.
பிரான்ஸ் “இன்னும் பிரெஞ்சுக்காரர்களின் கைகளில் இல்லை” என்று ஒப்பாரியிட்டதோடு, பிரான்ஸ் “கட்டளைகளை”, “பேர்லின், EU தலைநகர் பிரஸ்ஸெல்ஸ் மற்றும் வாஷிங்டனிலிருந்து பெறுகிறது” என்று அவர் கண்டனம் செய்தார்.
வெளியுறவுக் கொள்கை தொடர்பான அவரது குறிப்பில், லூ பென் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஐரோப்பாவில் உள்ள 19 நாடுகளாலும் பகிர்ந்து கொள்ளப்படும் யூரோ நாணயம் மீதாக தனது தாக்குதலை ஒருங்குவித்தார், ஐராப்பிய ஒன்றியம் கண்டம் முழுவதும் சிக்கன பொருளாதாரக் கொள்கைகளுக்காக தள்ளுகிறது, அது வாழ்க்கைத் தரங்களைக் குறைக்கிறது மற்றும் பத்து மில்லியன் கணக்கான வேலைகளை வெட்டுகிறது என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஜூனில் பிரிட்டிஷ் வாக்களித்தது பற்றி அவர் புகழ்ந்தார், அடுத்த ஆண்டு தான் பதவிக்கு வந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் வெளியேறவும் அதன் தேசிய நாணயமான பிராங்கிற்கு திரும்புமாறு அழைப்பேன் எனவும் வலியுறுத்திக் கூறினார். “நாம் சுதந்திரமான பிரான்சை விரும்புகிறோம், அதன் சட்டதிட்டங்களுக்கு, நாணயத்திற்கு அதுவே எஜமானன் மற்றும் அதன் எல்லைகளுக்கு அதுவே பாதுகாவலன்” என்று லூ பென் கூறினார்.
அதிகாரத்திற்கான அக்கறை கொண்ட போட்டியாளராக FN எழுந்து வருவது, முன்னேற்றத்தை மீண்டும் கொணர்தல் மற்றும் மக்களுக்கு சுதந்திரம் என்பதோடு கட்டுண்டதல்ல, மாறாக பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் அதன் நலன்களை வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் எல்லாவற்றுற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பலாத்காரமாக உறுதிப்படுத்துவதற்குரிய உந்துதலாகும்.
ஒரு தசாப்தகால உலகப் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றிய சிக்கனப் பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய யுத்தங்கள் ஆகியன ஐரோப்பிய முதலாளித்துவத்தை அதன் அடித்தளத்திலேயே ஆட்டம் காணச்செய்துள்ளன. பிரெக்ஸிட்டோடு ஐரோப்பிய ஒன்றியம் சிதறுண்டு போகத் தொடங்கி உள்ளது. பிரான்சின் இரு பாரம்பரிய கட்சிகளான PS மற்றும் வலதுசாரி குடியரசுக் கட்சி ஆகியன மிக செல்வாக்கிழந்து விட்டன, முதலாளித்துவ வர்க்கமானது அதன் ஆட்சிக்காக புதிய அடித்தளத்தைத் தேடுகிறது.
ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கு மிக்க பகுதிகள் நம்பிக்கையற்ற நிலையிலிருந்து வெளிவருவதற்கு ஒரே ஒரு வழியாக FN ஐத்தான் காண்கின்றன. யூரோவை கைவிட்டு பிரெஞ்சு தேசிய நாணயத்தை மதிப்பிறக்கம் செய்வதென்பது, தொழிலாளர்களை ஏழ்மையுறச் செய்யும், ஆகையால் உழைப்புச் செலவை வெட்டிக் குறைப்பதன் மூலம் ஆளும் வர்க்கம் தனது சர்வதேச போட்டித்தன்மையை மீட்பதற்கு, குறிப்பாக ஜேர்மனிக்கு எதிரான வணிக யுத்தக் கொள்கையை பின்பற்றுவதற்கு முயற்சிக்க வைக்கும்.
உள்நாட்டில், FN பிரான்சை முற்றிலும் ஒரு போலீஸ் அரசாக மாறுவதற்கு நோக்கம் கொண்டுள்ளது, அது ஏற்கனவே PS இன் அவசரகால நிலை தொடர்ந்து நீட்டிக்கப்படுவதால் நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் எல்லா ஏகாதிபத்திய யுத்த உந்துதலில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தன்னை மிகவும் பலமாக்கிக் கொள்வதற்கும் மிகவும் இராணுவமய சூழ்நிலைமைகளை உருவாக்குவதற்கும் PS இன் முஸ்லிம் விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத நடவடிக்கைகளையும் முடுக்கிவிடவும் கூடும்.
FN உம் மரின் லூ பென் உம் பிரெஞ்சு மக்களின் பெரும்பான்மையினர் மத்தியில் தனிப்பட்ட ரீதியில் இன்னும் செல்வாக்கற்றவர்களே. இது முதன்மையாக, FN நிறுவனர் மரினின் தந்தை ஜோன்-மரி லூ பென் பிரான்சின் நாஜி ஒத்துழைப்பாளர் விச்சி ஆட்சிக்கு அவரது ஆதரவு மற்றும் பிரான்சுக்கு எதிரான அல்ஜீரியாவின் 1954-1962 யுத்தத்தின்பொழுது விடுதலைப் போராட்ட வீரர்களை சித்திரவதைசெய்த பாராசூட் துருப்புக்களின் தலைவர் என்ற வகையில் அவரது பாத்திரத்தின் காரணமாக ஆகும்.
தேர்தல் வெளிப்பாட்டில் தீர்க்கமான காரணியாக உழைக்கும் மக்களின் கருத்துக்கள் இருக்கப்போவதில்லை, மாறாக ஆழ்ந்த சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலான ஆளும் வர்க்கத்தின் நலன்கள் ஆகும். லூ பென் வாய்ப்பு வெற்றிகாணாது என்று எண்ணுவது அழிவுகரமான தவறாக இருக்கும். அங்கு வெடிக்கும் தன்மையில் சமூக கோபம் இருக்கிறது, ஆனால் அது அதற்கான அரசியல் போக்கிடத்தை காணவில்லை; என்ன மேலாதிக்கம் செய்வது என்னவென்றால் PS போன்ற “இடது” கட்சிகள் என்று அழைக்கப்படுவனவற்றின் பிற்போக்கு கொள்கைகள் மீதான ஆழமான ஏமாற்றமாகும்.
முதலாளித்துவ அரசியலின் முழு நிறமாலையும் வலது புறம் அதிதொலைவுக்கு நகருகையில், FN ஆனது PS அல்லது LR இலிருந்து மிகவும் வேறுபட்டதாக இனியும் தோன்றவில்லை. அதன் புலம்பெயர்ந்தோர் விரோத வெறுப்புவாதம், சட்டம்-ஒழுங்கு பற்றிய மிகையுணர்ச்சிக் கோளாறு, முதலாளித்துவ ஆதரவு கொள்கைகள் மற்றும் இராணுவவாதம் ஆகியன பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலின் பிரதான நீரோடைக்குள்ளே நன்றாகவே உள்ளன, மற்றும் பிரதான கட்சிகளுள் FN மட்டுமே பரந்த மக்கள் எதிர் கொள்ளும் துன்பங்களுக்கு உணர்ச்சியை தூண்டும் வேண்டுகோள்களை விடுக்கின்றது. இதன் அடிப்படையில், அது முரணான வகையில் புலம்பெயர்ந்த தட்டினர் மத்தியில் கூட ஆதரவைக்காணும்.
குறிப்பாக உக்கிரமடையும் யுத்த நெருக்கடியால் இது தேவைப்படுமனால், பிரெஞ்சு ஊடகமும் ஆளும் செல்வந்த தட்டும் FN பக்கம் தேர்தலை ஊசலாட வைக்கும். தொழிலாள வர்க்கத்திற்குள் ஆழமான எதிர்ப்பை FN அரசாங்கம் உடனே எதிர்கொள்ளும், ஆனாலும், பிற்போக்கு சமூக ஜனநாயக மற்றும் போலி இடது சக்திகளின் பரந்த தட்டினரின் ஆதரவில் தங்கி இருக்கலாம் என FN அறியும்.
Fréjus மாநாட்டிற்குப் பின்னர், லூ பென் தான் எப்படி ஆட்சிக்கு வரமுடியும் என்று விளக்கினார். செவ்வாய்க்கிழமை அன்று RTL வானொலியிடம் அவர் கூறினார்: “நாங்கள் வெல்வோம், ஏனெனில் நாங்கள் செய்திருக்கும் விருப்பத் தேர்வுகள் இந்த நாட்டின் பெரும்பான்மையினரது ஆகும்.”
அவர் தான் ஒரு அரசாங்கத்தை பின்வருமாறு அமைக்க முடியும் என்றார், “தேசிய முன்னணியிலிருக்கும் ஆட்களுடன், தேசத்தையும் தாயகத்தையும் பாதுகாத்தல் என்ற அடிப்படையில் எங்களுடன் சேரவிருக்கும் மக்களுடனும் சேர்ந்து……. நான் நம்புகிறேன் வலதிலும் இடதிலும் தேசபக்தர்கள் இருக்கிறார்கள் என்று. எமது இலக்கு மக்களை ஒன்றாய் சேர்ப்பதுதான்.”
லூ பென்னின் மூலோபாயமானது, எல்லாவற்றிற்கும் மேலாக PS மற்றும் அதன் போலி இடது அரசியல் செயற்கைக் கோள்களின் பிற்போக்குப் பண்பின்மீது தங்கி இருக்கிறது. 2007ல் நிக்கொலாய் சார்க்கோசி கீழ் ஒரு வலதுசாரி அரசாங்கத்தில் எப்படி பெரிய எண்ணிக்கையில் PS அலுவலர்கள் சேர்ந்தனர் என்பதை அவ்வம்மையார் ஐயத்திற்கிடமில்லாமல் கவனமாகவே அவதானித்தார். 2011ல் எஃப்என் தலைமையை ஏற்றதின் பின்னர் இருந்து, அவர் ஊடகம் மற்றும் பிரெஞ்சு “இடது” என்று தம்மைத்தாமே தசாப்தகாலமாக சொல்லிக்கொண்ட ஊழல் சக்திகளினதும் ஆதரவுடன் எஃப்என் ஐ இயல்பானதாக ஆக்குவதற்கு அல்லது “பூதாகரமற்றதாக்குவதற்கு” வேலைசெய்தார்.
PS யுத்தத்திற்கும் சிக்கனப் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஒரு அரசியல் அடித்தளத்தை காணவிழைவதால், அதன் கொள்கைகள் FN ஐ இயல்பானதாக்க செய்வதில் ஒரு முக்கியப் பாத்திரம் ஆற்றின. கடந்த ஆண்டின் சார்லி ஹெப்டோ மற்றும் நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர், ஹோலண்ட் “தேசிய ஒற்றுமை” யை நிலைநாட்ட எலீசே ஜனாதிபதி மாளிகைக்கு மரின் லூ பென்னை திரும்பத் திரும்ப வரவேற்றார்.
அதேவேளை, PS அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் அல்ஜீரிய யுத்தகால மசோதா அடிப்படையிலான அவசரகால நிலையை அமல்படுத்தியது மற்றும் பாசிச சட்டக் கோட்காட்பாடுகளை புணருத்தாரனம் செய்ய விழைந்தது. குடியுரிமை பறிக்கும் கோட்பாட்டை பிரெஞ்சு அரசியற் சட்டத்தில் சேர்க்க அது வாதாடியது. இக்கொள்கை விச்சி ஆட்சியை எதிர்த்துப் போராடிய தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது, மற்றும் பெரிதும் இழிவானவகையில், ஐரோப்பா முழுதும் நாஜி மரணமுகாம்களுக்கு, விச்சி ஆட்சி பலவந்தமாய் அனுப்பிய ஆயிரக்கணக்கான பிரெஞ்சு யூதர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது.
குட்டி முதலாளித்துவ இடது முன்னணியின் ஜோன் லூக் மெலன்சோன் போன்ற போலி இடது சக்திகளும் கூட FN உதயமாவமதில் முக்கிய பொறுப்பு ஏற்பனவாகும். ஜோன் லூக் மெலன்சோன் குறிப்பாக FN -ஐ பூதாகரமற்றதாக்கும் சூழ்ச்சிக்கையாளலுக்கு வழி நடத்தினார், அவர் வெளிப்படையாகவே லூ பென்னுடன் சேர்ந்து தோன்றினார் மற்றும் 2011ல் அவ்வம்மையாருடன் திரும்பத் திரும்ப விவாதத்தில் ஈடுபடலை ஏற்றார்.