ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK: Hinkley Point nuclear plant delay provokes angry response from China

ஐக்கிய இராஜ்ஜியம்: ஹின்க்லே பாயிண்ட் அணுஆலையைத் தாமதப்படுத்துவது சீனாவிடமிருந்து கோபமான விடையிறுப்பைத் தூண்டுகிறது

By Robert Stevens
11 August 2016

ஐக்கிய இராஜ்ஜியத்தின் (UK) முதல் புதிய அணுஆலையை 20 ஆண்டுகளில் கட்டும் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட தாமதிப்பதென பழமைவாத பிரதம மந்திரி தெரேசா மே தீர்மானித்திருப்பது, சர்வதேசரீதியாக புவிசார் அரசியல் உறவுகளில் பெரும் பாதிப்புகளைக் கொண்டுள்ளது.

அந்த முன்மொழியப்பட்ட உடன்படிக்கையை தள்ளிப் போடுவதென 24 மணி நேரத்திற்கும் குறைவான அவகாசத்தில் மே முடிவெடுத்திருந்தார். அந்த உடன்படிக்கையின் கீழ் பிரெஞ்சு அரசு நிறுவனமான EDF இங்கிலாந்தின் ஹின்க்லே பாயிண்ட் இல் 18 பில்லியன் பவுண்ட் ஆலையைக் கட்டமைக்க இருந்தது. அதற்கான தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை சீனாவுடன் நெருக்கமாக பிணைந்த அணுசக்தி நிறுவனங்கள் வழங்க இருந்தன.  

அதை தள்ளிப்போடுவதற்கான தீர்மானம் பிரான்ஸ் மற்றும் சீனாவைக் கோபப்படுத்தியது. ஹின்க்லே பாயிண்ட் திட்டத்தில் அவை சம்பந்தப்படுவதை அவை இரண்டுமே மூலோபாயரீதியில் முக்கியமானதாக கருதின. அந்த உடன்படிக்கை இரத்து செய்யப்படுமானால் பத்தாயிரக்கணக்கான வேலைகள் ஆபத்திற்குள்ளாகும்.

திங்களன்று ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான சீனாவின் தூதர் Liu Xiaoming (லு ஜியோமிங்) ஐ கொண்டு, பைனான்சியல் டைம்ஸ் இன் கருத்துரை பக்கத்தில் ஒரு முக்கிய கட்டுரை வெளியிட்டதன் மூலமாக சீனா விடையிறுத்தது. “ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் சீனாவிற்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கைக்கு ஹின்க்லே பாயிண்ட் ஒரு பரிசோதனை" என்ற தலைப்பின் கீழ், ஜியோமிங் எச்சரிக்கையில், “இப்போது சீனா-இங்கிலாந்து உறவு ஒரு முக்கியமான வரலாற்று சிக்கலான நிலையில் உள்ளது… ஐக்கிய இராஜ்ஜியம் சீனாவிற்கு அதன் கதவுகளைத் திறந்துவிட்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் ஹின்க்லே பாயிண்ட் திட்டத்தைத் தொடர்ந்து ஆதரிக்குமென்று நான் நம்புகிறேன் மற்றும் அத்திட்டத்தை சுமூகமாக நிறைவேற்றுவதற்கு சாத்தியமான அளவில் விரைவாக ஒரு முடிவுக்கு வருமென்றும் நான் நம்புகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மே இன் முடிவு அவருக்கு முன்பிருந்த டேவிட் கேமரூன் மற்றும் அவரது சான்சிலர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் ஏற்றிருந்த கொள்கையைக் குறுக்கறுக்கின்றது, அவர்கள் பொருளாதார கொள்கையின் மத்திய அச்சாக ஐக்கிய இராஜ்ஜியத்தில் சீன முதலீட்டை மையப்படுத்தி சீனாவுடனான பொருளாதார உறவுகளை ஏற்படுத்தி இருந்தனர்.

ஹின்க்லே பாயிண்ட் இல் எது ஆபத்தில் இருக்கிறது என்பதை வலியுறுத்த அதன் முதலீட்டு அளவை ஜியோமிங் வெளியிட்டார். “வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் திறந்தவொரு நாடாக இருப்பதில் பிரிட்டன் பெருமை கொள்கிறது… துல்லியமாக இத்தகைய திறந்ததன்மையின் காரணமாக தான் சீனா ஐரோப்பாவில் அல்லாத இரண்டாவது மிகப்பெரிய ஐக்கிய இராஜ்ஜியத்தின் வர்த்தக பங்காளியாக உள்ளது. வெளிநாடுகளில் முதலீடு செய்ய முனையும் சீன நிறுவனங்களுக்கான முக்கிய இடங்களில் பிரிட்டனும் ஒன்றாகும். கடந்த ஐந்தாண்டுகளில், அத்தகைய நிறுவனங்கள் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் முதலீடு செய்த மொத்த முதலீடுகளைக் காட்டிலும் அதிகமாக ஐக்கிய இராஜ்ஜியத்தில் முதலீடு செய்துள்ளன,” என்றார். [அழுத்தம் சேர்க்கப்பட்டது]    

“ஐக்கிய இராஜ்ஜியத்தின் புதிய அரசாங்கம் சீனா மற்றும் சீன வணிகங்களுடனான உறவுகளை மதிக்கிறது என்பதை ஏனைய நாடுகளுக்கு மறுஉத்தரவாதமளிக்க செப்டம்பரில் சீனாவில் நடக்க உள்ள ஜி20 உச்சிமாநாட்டின் போது கிடைக்கும் வாய்ப்பையும் மற்றும் முன் இருக்கும் வாய்ப்புகளையும் மே கைப்பற்றிக் கொள்ள வேண்டும். அனைத்தையும் விட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராஜ்ஜியம் வெளியேற இருப்பதானது சீனாவுடன் முன்னேறிவரும் வணிக உறவுகளைத் தவிர்க்கவியலாததாக ஆக்குகிறது," என்று தலையங்கத்தில் எழுதி பைனான்சியல் டைம்ஸ் ஜியோமிங் இன் தலையீட்டை ஆமோதித்தது.

அணுசக்தி தொழில்நுட்ப ஏற்றுமதி சீனாவின் உலகளாவிய அபிலாஷைகளின் மையத்தில் உள்ளது. சீன பொது அணுசக்தி பெருநிறுவனம் "சீனாவில் மிகப்பெரிய அணு மின்சக்தி வழங்கும் நிறுவனமாகும்" மற்றும் "உலகின் மிகப்பெரிய அணுஉலை கட்டுமான நிறுவனமான அது உலகெங்கிலும் உள்ள அணுசக்தி உற்பத்தியாலைகளில் ஐந்தில் ஒன்றைக் கட்டுவதில் சம்பந்தப்பட்டுள்ளது,” என்று ஜியோமிங் குறிப்பிட்டார். 

கடந்த அக்டோபரில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பிரிட்டனுக்கு விஜயம் செய்த போது அடிக்கல் நாட்டிய ஹின்க்லே திட்டத்தில் சீனா அதன் பாத்திரத்தை, ஐக்கிய இராஜ்ஜியத்தில் அதன் சொந்த அணுமின் நிலையத்தைக் கட்டமைப்பதற்கான ஒரு முன்னோக்கிய படிக்கல்லாக பார்க்கிறது. பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது, “பிரிட்டனில் பெய்ஜிங்கின் நிஜமான நோக்கம் முற்றிலுமாக ஹின்க்லே பாயிண்ட் மட்டுமல்ல, மாறாக Essex பிராட்வெல் இல் உள்ள EDF இன் மற்றொரு இடங்களில் அதன் சொந்த வடிவமைப்பிலான மற்றொரு அணுசக்தி நிலையத்தைக் கட்டமைக்கவும் மற்றும் நிதியுதவி வழங்கவும் இதையொரு வாய்ப்பாக பார்க்கிறது,” என்றது.

“இது முற்றாக பிராட்வெல் அணுநிலையம் சம்பந்தபட்டதாகும். ஹின்க்லே க்காக சீனாவிடமிருந்து 6 பில்லியன் பவுண்டு பெறுவதில் தெரேசா [மே] மகிழ்ச்சி அடையலாம், ஆனால் அடுத்த கட்டம் குறித்து அவர் மகிழ்ச்சி அடைவாரா தெரியாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்,” என்று கூறிய பெயரிட விரும்பாத அரசு அமைச்சர் ஒருவரை அது மேற்கோளிட்டது.

பிரிட்டனில் அணுசக்தி ஆலை கட்டமைப்பதை சீனா அதன் பட்டு சாலை பொருளாதார மார்க்கம் அல்லது ஒரே மார்க்கம் ஒரே சாலை (OBOR) மூலோபாயத்தின் மையமாக பார்க்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தக மற்றும் பொருளாதார ஆதாயங்களுக்குக் கணிசமானளவிற்கு முதலீட்டை வழங்குவதன் மூலமாக, யுரேஷியா, மத்தியக் கிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கிலுமான நாடுகளை அதன் திட்டங்களுக்குள் இழுக்க முடியுமென்றும், அதன் மூலமாக "ஆசிய முன்னிலையைக்" கொண்டு சீனாவை இராஜாங்கரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும் சுற்றி வளைக்க முயலும் அமெரிக்க முயற்சிகளைக் கடந்து விடலாமென்றும் பெய்ஜிங் நம்புகிறது.   

ஹின்க்லே உடன்படிக்கை ஜி ஜின்பிங் விஜயத்தின் போது தற்காலிகமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அது மார்ச் 2015 இல் சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) கையெழுத்திடும் முதல் மேற்கத்திய சக்தியாக பிரிட்டனை ஆக்குவதென்ற கேமரூனின் முடிவைப் பின்தொடர்ந்து நடந்தது. இத்தகைய நகர்வுகள் வாஷிங்டனை ஆத்திரமூட்டியது. சீனாவுடன் ஆழமடைந்துவரும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வர்த்தக உறவுகளுக்கு, உளவுத்துறை சேவைகள் மற்றும் இராணுவத்தினுள் உள்ள அமெரிக்க மற்றும் முன்னணி பிரமுகர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பிற்கு அவரது விடையிறுப்பாக மே இன் தலையீடு பரவலாக பார்க்கப்பட்டது.

ஜியோமிங் இன் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரைக்கு விடையிறுப்பாக, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் ஒரு முயற்சியில் ஐக்கிய இராஜ்ஜிய அரசின் ஒரு பிரதிநிதி செவ்வாயன்று ஓர் அறிக்கை வெளியிட்டார். “இந்த [அவர்] முடிவு ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டம் சம்பந்தப்பட்டது, புதிய அரசாங்கம் அதை கவனமாக பரிசீலிப்பது சரியானதே. உலகளாவிய பொருளாதாரத்தில் இருந்து சர்வதேச பிரச்சினைகள் வரையில் பரந்த விடயங்கள் மீது நாங்கள் சீனாவிற்கு ஒத்துழைப்போம் என்பதோடு சீனாவுடன் நாங்கள் ஒரு பலமான உறவைப் பெற தொடர்ந்து முயல்வோம்,” என்று அது குறிப்பிடுகிறது.

கேமரூன் அரசாங்கம் சீனாவை நோக்கிய திரும்பியமை, பெய்ஜிங்கில் இருந்து வரும் முதலீடு பொருளாதார வளர்ச்சிக்கும் ஐக்கிய இராஜ்ஜிய பொருளாதாரத்தின் ஸ்திரப்பாட்டிற்கும் மிகவும் அத்தியாவசியம் என்ற வாதங்களை உடன் வைத்திருந்தது. சர்வதேச பெருநிறுவனங்கள் பலமான 15 மில்லியன் மக்களை சுரண்டுவதற்கு உதவும் வகையில் இங்கிலாந்தில் தொழில்துறைகள் அகற்றப்பட்டு வரும் வடக்கு நகரங்களை இணைக்கும் அதன் "வடக்கு மின்னாலை" (Northern Powerhouse) திட்டம், சீன முதலீட்டை மையத்தில் கொண்டிருந்தது. ஜி ஜின்பிங் இன் விஜயத்திற்கு முன்னதாக, அப்போதைய சான்சிலர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் சென்ங்டூவில் பேசுகையில், இலண்டன் மற்றும் பெர்மின்ஹாம் க்கு இடையே முன்மொழியப்பட்ட HS2 அதிவிரைவு ரயில் சேவையின் முதல் கட்டம் உள்ளடங்கலாக, 11.8 பில்லியன் பவுண்டு மதிப்பிலான ஏழு ஒப்பந்தங்களை ஏலத்தில் எடுக்குமாறு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டார். அவர் வடக்கு இங்கிலாந்தில் கூடுதலாக 24 பில்லியன் பவுண்டு முதலீட்டிற்கான ஒப்பந்த கேள்விப்பத்திரத்தை வரவேற்றார்.      

தேசியளவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் மூலோபாயத்திற்கு உதவும் விதத்தில், ஓஸ்போர்ன் இன் திட்டம் கிடப்பில் போடப்படுமென மே சமிக்ஞை செய்துள்ளார்.

உத்தேசிக்கப்பட்ட 35 ஆண்டுகால ஹின்க்லே திட்ட செயல்பாட்டில் கிடைக்கும் வருவாய் மற்றும் கட்டண உத்தரவாதங்களுடன், நீண்டகால ஓட்டத்தில் அதிலிருந்து மிகப்பெரும் இலாபம் கிடைக்குமென பிரான்ஸ் எதிர்பார்க்கிறது. கார்டியனின் சைமன் ஜென்கின்ஸ், “ஹின்க்லே பாயிண்ட் மோசமான வியாபாரம்" என்று சாடினார். கேமரூன் நடைமுறையளவில் சீன மற்றும் பிரெஞ்சு கட்டுமான நிறுவனங்களின் பைகளை "தங்கத்தால்" “நிரப்பியுள்ளார்" என்று கூறிய அவர், “கொள்முதல் வரலாற்றிலேயே மிகவும் மோசமான உடன்படிக்கை" என்றார். “அதன் மோசமான நிலைக்காக அதை" மே "கிடப்பில் போட வேண்டும்.”

ஆனால் தள்ளிப்போடுவதென்ற அவரின் தீர்மானத்தை மே அறிவித்த அன்றைய தினத்திற்கு வெறும் ஒரு நாள் முன்னர் தான் EDF பொதுக்குழு அந்த உடன்படிக்கைக்கு ஒப்புதலை வழங்கியது. தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து EDF பங்குதாரர்கள் பலரது கடுமையான எதிர்ப்பின் முன்னால், ஏற்கனவே பத்து பில்லியன் கணக்கான யூரோ அளவிற்கு கடனில் உள்ள EDF பொதுக்குழுவின் ஒரு சிறிய பெரும்பான்மை மட்டுமே, அந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தது. ஏற்கனவே திட்டமிட்ட 18 பில்லியன் பவுண்டை விட அத்திட்டத்தின் மொத்த நிதி செலவு 2.7 பில்லியன் அதிகமாக பவுண்டாக இருக்குமென இந்த வாரம் வெளியானது. இந்த திட்டமிடப்பட்ட தொகை  EDF இன் பங்கிற்கான விலையை 12 பில்லியன் பவுண்டில் இருந்து 13.8 பில்லியன் பவுண்டாக உயர்த்தக்கூடும்.

திங்களன்று ஓர் அறிக்கை வெளியிட்ட ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், ஹின்க்லே மீது ஐயப்படுவது EDF மற்றும் பிரெஞ்சு பொருளாதாரத்திற்கும் படுபயங்கர அபாயமாகும் என்று எச்சரித்தார். “தேசிய எரிசக்தி நிறுவனத்தின் உயிர்பிழைப்பை மற்றும் ஒற்றுமையையே நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடிய இந்தளவிற்கு முக்கியமான ஒரு திட்டத்திற்கு, அத்திட்டத்தைத் தொடர்வதற்கு முன்னரே எல்லா சந்தேகங்களும் மற்றும் தயக்கங்களும் தீர்க்கப்பட வேண்டியது அவசியமென சோசலிஸ்ட் கட்சி நம்புகிறது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மே இன் முடிவானது, ஜூன் மாதம் பிரிட்டன் வெளியேறுவது மீதான வாக்கெடுப்பிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியின் பாகமாகும். கேமரூனின் இராஜினாமாவை தொடர்ந்து, பதவியேற்றதும், அவர் குறிப்பிடுகையில், பிரிட்டன் வெளியேற்றத்திற்குப் பின்னர் UK இன் பொருளாதார நிலைமைகள் சேதமுறாமல் பாதுகாக்கும் முறையீடுகளில் அவர் கடுமையாக இருக்கப் போவதாக அறிவித்தார். இந்த கொள்கையின் முதல் பலன் தான், பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுவதைப் போல, EDF “இன்னும் சிறந்த வாய்ப்புடன்" வர வேண்டுமென்ற ஒரு இன்றியமையாத கோரிக்கையாகும்.   

தொழிற்கட்சி மே மீது குற்றஞ்சாட்டி விடையிறுத்தது. நிழலமைச்சரவையின் வணிகங்களுக்கான செயலர் ஜொன் ட்ரிக்கெட் (Jon Trickett) அறிவிக்கையில், “அந்த வெகுஜன வாக்கெடுப்பின் போது, ஐரோப்பாவிற்கு வெளியிலிருக்கும் பிரிட்டனின் பொருளாதார சொத்துக்கள் சீனாவுடனான மற்றும் கிழக்கில் உள்ள ஏனைய பெரிய வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடனான நமது உறவுகளை முன்னெடுப்பதன் மூலமாக பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது பிரிட்டன் வெளியேறுவதற்கான முகாமில் இருந்து வந்த ஒருசில நிறுவன முன்மொழிவுகளில் ஒன்றாகும்,” என்றார். “ஹின்க்லே பாயிண்ட் மீதான பேரம்பேசல்களில் பிரதம மந்திரி குளறுபடி செய்து, 40 பில்லியன் பவுண்டு முதலீட்டு உள்வரவை நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டார்,” என்றார்.   

ஜேர்மி கோர்பினை கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கும் முயற்சிகளில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்து வருபவரும், முன்னாள் தொழிற்கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயரின் ஒரு நெருக்கமான கூட்டாளியுமான பீட்டர் மாண்டெல்சன், ஹின்க்லே பாயிண்ட் ஐ முன்னெடுக்க மே அனுமதிக்க வேண்டுமென புதனன்று வலியுறுத்தினார். பிரிட்டனின் சீன மையம் எனும் மத்தியஸ்த அமைப்பின் தலைவர் பதவியிலிருக்கும் மாண்டெல்சன் பிபிசி க்கு கூறுகையில், “மிகப்பரந்த எதிர்கால வர்த்தக கொள்கைகளில் நாம் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதாலும், ஐரோப்பாவில் நாம் இழக்கும் வர்த்தகத்தை நாம் பிரதியீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனேகமாக நாம் சீனாவின் நல்லெண்ணத்தை அதிகமாக சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்பதாலும் நமது சந்தையின் அளவைப் பொறுத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனேகமாக சீனாவைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்பதால் …" பிரிட்டன் வெளியேற்றத்திற்குப் பின்னர், “யாருடன் வர்த்தம் செய்வது என்பதில் நாம் தடுமாறிக் கொண்டிருக்க முடியாது,” என்றார்.

 

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

UK delays nuclear plant deal signed with France and China
[2 August 2016]