Print Version|Feedback
UK and Swedish governments continue their persecution of Julian Assange
இங்கிலாந்து மற்றும் சுவீடன் அரசாங்கங்கள் ஜூலியன் அசான்ஜ் மீதான அவற்றின் துன்புறுத்தலை தொடர்கின்றன
By Robert Stevens
6 February 2016
பிரிட்டிஷ் மற்றும் சுவீடன் அரசாங்கங்கள் அவற்றின் கூட்டு சதி மூலமாக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை "ஏதேச்சதிகாரமான தடுப்புக்காவலுக்கு" உட்படுத்தி உள்ளன என்பதை எடுத்துக்காட்டும் ஒரு பகிரங்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெள்ளியன்று வெளியிட்டது.
“ஏதேச்சதிகாரமான முறையில் தனிநபர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதைக் குறித்து விசாரிக்க அல்லது சர்வதேச மனித உரிமைகள் நெறிமுறைகளுக்கு பொருந்தி இல்லாததைக் குறித்து விசாரிக்க, அவசியப்படும் போது தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க மற்றும் இழப்பீட்டுக்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்காக", ஏதேச்சதிகார தடுப்புக்காவல் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு (UNWGAD) என்பது 1991 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வல்லுனர் குழுவாகும்.
ஐ.நா. சபையின் கருத்துரை வெளியானதை தொடர்ந்து, அசான்ஜ் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சம் அடைந்துள்ள ஈக்வடார் தூதரகத்திலிருந்து, ஒரு காணொளி ஒளிபரப்பு மூலமாக ஊடகங்களுக்கு ஓர் அறிக்கை அளித்தார். மொத்தமாக அவர் இப்போது ஐந்தரை ஆண்டுகளாக தடுப்புக்காவலில் இருந்துள்ளதாக தெரிவித்தார்: “குற்றச்சாட்டு இல்லாமல் தடுப்புக்காவலில் வைப்பது இன்று சட்டத்திற்கு புறம்பானதாக காணப்பட்டுள்ளது. நான் இந்த முடிவை ஒரு நிரூபிப்பாக கருதுகிறேன்,” என்றார். “இப்போது விடயத்தைச் சட்டத்தின் மூலம் தீர்க்க வேண்டியது தான்" பிரச்சினை என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
அதன் விசாரணை முடிவுகளை வெளியிட்டு UNWGAD விவரிக்கையில், அவை "குடி உரிமை மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) போன்ற சர்வதேச மனித உரிமைகளுக்கான சட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைந்தவை, அந்தளவிற்கு அவை சட்டதிட்டங்களுக்கு" உட்பட்டவை என்று குறிப்பிட்டது. “UNWGAD இன் கருத்துக்கள் மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றம் உட்பட முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய நீதித்துறை அமைப்புகளால் அதிகாரபூர்வமாகவும் கருதப்படுகின்றன,” என்பதனையும் அது சேர்த்துக் கொண்டது.
இங்கிலாந்து மற்றும் சுவீடன் அரசாங்கங்கள் அசான்ஜ் மீதான வேட்டையை தொடங்கியது முதற்கொண்டு அவற்றின் நடவடிக்கைகளை அந்த விசாரணை முடிவுகள் குணாம்சப்படுத்தி உள்ள விதத்தில், அந்த அரசாங்கங்கள் சர்வதேச சட்டத்தை அனுசரிக்க மறுத்திருந்தன மற்றும் ஐ.நா. சபையின் தீர்ப்பையும் நிராகரித்திருந்தன. இங்கிலாந்து வெளியுறவுத்துறை அலுவலகம் குறிப்பிடுகையில், “இது எதையும் மாற்றாது. ஜூலியன் அசான்ஜ் ஏதேச்சதிகாரமான தடுப்புக்காவலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற எந்தவித கூற்றையும் நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்,” என்றது.
ஐந்து நபர்களை கொண்ட UNWGAD குழுவின் கருத்துரை வெறும் ஐந்து பத்திகளில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், அது அமெரிக்க அரசின் கூட்டணியுடன் இங்கிலாந்து மற்றும் சுவீடனால் நடத்தப்பட்ட அசான்ஜ் மீதான சட்டவிரோத தடுப்புக்காவல் மீதான அழிவுகரமான குற்றப்பத்திரிகையாகும்.
“முதலில் வேண்ட்ஸ்வோர்த் சிறைச்சாலையில் தடுப்புக்காவல், அதைத் தொடர்ந்து வீட்டுக் காவல் மற்றும் ஈக்வடார் தூதரகத்தில் அவர் அடைக்கப்பட்டிருப்பது,” என அசான்ஜ் பல்வேறு வடிவத்தில் சுதந்திரம் பறிக்கப்பட்டமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்,” என்று UNWGAD தெரிவித்தது. “அங்கே தொடர்ச்சியான சுதந்திரம் பறிக்கப்பட்டமை இருந்தன என்று முடித்திருந்த அந்த விசாரணைக் குழு (working group), அந்த தடுப்புக்காவல் ஏதேச்சதிகாரமானது ஏனென்றால் தடுப்புக்காவலின் முதல் கட்டத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார், அதற்கு காரணம் சுவீடன் விசாரணைகளின் போது அதன் வழக்குத்தொடுனர் சிரத்தைக் காட்டவில்லை, அது திரு. அசான்ஜை இன்னும் நீண்டகாலத்திற்கு தடுப்புக்காவலில் வைக்க வழிவகுத்தது என்பதைக் கண்டறிந்திருந்தது”
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் (UDHR), குடிஉரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றை மீறி அசான்ஜ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அசான்ஜின் "தடுப்புக்காவல் UDHR இன் ஷரத்து 9 மற்றும் 10 இன் விதிமீறலாகும் மற்றும் ICCPR இன் ஷரத்துக்கள் 7, 9(1), 9(3), 9(4), 10 மற்றும் 14 இன் விதிமீறலாகும்...” என்பதை அது கண்டறிந்திருப்பதாக UNWGAD குறிப்பிடுகிறது.
அசான்ஜின் "பாதுகாப்பு மற்றும் உடல்நிலையை" உறுதி செய்யுமாறு மற்றும் "உரிய விதத்தில் சுதந்திர நகர்வுக்கு அவருக்கிருக்கும் உரிமையைப் பெறுவதில் ஒத்துழைக்க, மற்றும் தடுப்புக்காவல் மீது சர்வதேச விதிமுறைகள் உத்தரவாதம் அளிக்கும் அவரது உரிமைகளை அவர் முழுமையாக பெறுவதை உறுதி செய்யுமாறு" அந்த விசாரணை குழு சுவீடன் மற்றும் இங்கிலாந்திற்கு அழைப்புவிடுக்கிறது.
டிசம்பர் 4, 2015 இல் நிறைவேற்றப்பட்ட “ஜூலியன் அசான்ஜின் விடயத்தில் விசாரணைக் குழுவின் கருத்துரை" என்பதன் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. அந்த 18 பக்க ஆவணம், செப்டம்பர் 2014 இல் அசான்ஜின் சட்டக்குழுவால் அவர்களிடம் விண்ணப்பிக்கப்பட்டதன் மீதான விசாரணை முடிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இங்கிலாந்து மற்றும் சுவீடன் அரசாங்கங்களும் அவற்றினது வழக்கை UNWGAD இன் முன்வைத்தன. விசாரணைக் குழுவின் இந்த முடிவுகள், அசான்ஜின் கைது நடவடிக்கை மற்றும் தடுப்புக்காவல் எல்லா விதத்திலும் சர்வதேச சட்டத்திற்குப் பொருந்தியது என்று இங்கிலாந்து மற்றும் சுவீடன் அதிகாரிகள் கூறும் ஒவ்வொரு வாதத்தையும் நொறுக்கும் மறுப்புரையாக உள்ளன.
டிசம்பர் கருத்துரை குறிப்பிடுகிறது, “வேண்ட்ஸ்வோர்த் சிறைக்கூடத்தில் தனிமைப்படுத்திய தடுப்புக்காவலின் போது, 550 நாட்கள் வீட்டுக்காவலின் கீழ் நிறுத்திய போது, மற்றும் இங்கிலாந்தில் இலண்டனில் உள்ள ஈக்வடார் குடியரசு தூதரகத்தில் தொடர்ந்து சுதந்திரம் பறிக்கப்பட்ட போது என மூன்று தருணங்களில் அசான்ஜிற்கு சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் ஒரு நியாயமான விசாரணைக்கான உத்தரவாதங்கள் வழங்கப்படவில்லை.”
அது குறிப்பிடுகிறது, “ஒரு குற்றகர பழிச்சுமத்தல் அடிப்படையில் சுவீடன் குற்றவழக்கில் பிறக்கப்பட்ட ஐரோப்பிய கைது பிடியாணை மட்டுமே திரு. அசான்ஜின் சுதந்திரம் பறிக்கப்படுவதற்கு ஒரே அடித்தளமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த கருத்துரை நிறைவேற்றப்பட்ட நாள் வரையில், திரு. அசான்ஜ் சுவீடனில் ஒருபோதும் உத்தியோகபூர்வமாக குற்றஞ்சாட்டப்படவில்லை.” [அழுத்தம் சேர்க்கப்பட்டது.]
அந்த கருத்துரை பின்வருமாறு முடிக்கப்படுகிறது: “எதிர்தரப்பின் வாதத்தைக் கேட்டறியும் (audi alteram partem) கொள்கையின் ஓர் அடிப்படை அம்சமான, ஓர் அறிக்கை சமர்பிப்பதற்கான வாய்ப்பு, அவர் தரப்பு ஆதாரத்தை அணுகுவதற்கான வாய்ப்பு ஆகியவை அசான்ஜிற்கு மறுக்கப்பட்டுள்ளது, அவ்விதத்தில் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அவர் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது; (2) அதன் காரணமாக அவ்வாறான தடுப்புக்காவலின் காலஅளவு குற்றமற்றவர் என்று ஊகிக்கப்பதற்குகூட பொருந்தாமல் போயுள்ளது."
UNWGAD இன் வெள்ளிக்கிழமை அறிக்கை அறிவிக்கிறது, “திரு. அசான்ஜ் சுதந்திரமாக நகர்வதற்கும் மற்றும் இழப்பீட்டைப் பெறுவதற்கும் உரியவர் என்பதை, அந்த [டிசம்பர்] கருத்துரையில் விசாரணை குழு அங்கீகரித்துள்ளது.”
3-1 என்ற பெரும்பான்மையுடன் UNWGAD இந்த முடிவுக்கு வந்திருந்தது. “திரு. அசான்ஜ் ஓர் ஆஸ்திரேலிய பிரஜை என்ற நிலையில், அதே தேசத்தைச் சேர்ந்த செயற்குழு அங்கத்தவர்களில் ஒருவரான [திருமதி Leigh Toomey] அந்த கலந்துரையாடல்களில் பங்கெடுப்பதிலிருந்து அவரே முன்வந்து தவிர்த்துக் கொண்டார்,” என்பதை அது குறிப்பிட்டது. இது அதன் வேலை முறைகளுக்கான 5 ஆவது விதிக்கு உட்பட்டது என்று UNWGAD தெரிவித்தது.
ஒரேயொரு எதிர்க்கருத்தை உக்ரேனிய வழக்குத்தொடுனரான விளாடிமிர் ரொகிலோவ்ஸ்கி முன்வைத்தார். அசான்ஜ் தடுப்புக்காவலில் வைப்பட்டிருக்கவில்லை, ஆகவே இந்த வழக்கை UNWGAD விசாரணைக்குக் கூட எடுக்க வேண்டியதில்லை என்று Tochilovsky வாதிட்டார். ரொகிலோவ்ஸ்கின் பொருத்தமற்ற கருத்தை சுவீடன் அரசாங்கம் ஆதரித்தது.
விசாரணைக் குழுவின் தீர்ப்புரை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சுவீடன் அரசாங்கங்களின் கடுமையான எதிர்ப்பைச் சமாளித்து வெளியாகி இருந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முன்னாள் UNWGAD குழு தலைவரான நோர்வேயின் வழக்கறிஞர் பேராசிரியர் மற்ஸ் அன்டெனாஸ் கார்டியனுக்கு வெள்ளியன்று கூறுகையில், “[அக்குழு] மிகவும் பலமான அரசியல் அழுத்தத்தின் கீழ் இருந்ததை நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்,” என்றார். கடந்த கோடையில் அவரது பதவிகாலத்தை முடித்திருந்த அன்டெனாஸ், அசான்ஜின் தடுப்புக்காவல் மீதான அறிக்கையைத் தயார் செய்வதன் ஆரம்ப கட்டங்களில் சம்பந்தப்பட்டிருந்தார்.
அசான்ஜிற்கு சாதகமான அக்குழுவின் விசாரணை முடிவுகளை அன்டெனாஸ் ஆதரித்தார், “இதுவொரு தைரியமான முடிவு, சர்வதேச சட்டத்தினது ஆட்சிக்கு இது முக்கியமாகும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
ஏதேச்சதிகாரமான தடுப்புக்காவல்கள் குறித்த ஐ.நா. குழுவின் விசாரணை முடிவுகளைத் தங்களின் சொந்த சூறையாடும் நோக்கங்களுக்காக பொதுவாக பயன்படுத்தியுள்ள ஏகாதிபத்திய சக்திகளின் பாசாங்குத்தனம் மலைப்பூட்டுவதாகும். அன்டெனாஸ் சரியாக பின்வருமாறு கண்டறிந்திருந்தார், “இதை ஒருவரும் ஒப்பிடவிரும்பாவிட்டாலும், மனித உரிமைகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை நடத்திய எந்தவொரு நாட்டிற்கு எதிராக இந்த விசாரணை முடிவுகள் முன்வைக்கப்பட்டு இருந்தால், பின் இத்தகைய அரசுகள் [சுவீடன் மற்றும் இங்கிலாந்து] அந்த [குற்றத்திற்குட்பட்ட] நாடு விசாரணைக் குழுவின் தீர்ப்புக்கு இணங்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கும்.”
சர்வதேச சட்ட ஆட்சிமுறைக்கு ஒபாமா நிர்வாகத்துடன் சேர்ந்து இங்கிலாந்து மற்றும் சுவீடன் அரசாங்கங்களின் கடுமையான விரோதம், உள்நாட்டில் கடுமையான சிக்கனத் திட்டங்களை பின்பற்றுவதற்கும் மற்றும் வெளிநாடுகளில் ஏகாதிபத்திய போர் தொடுப்பதற்கும் அவசியப்படும், தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவற்றின் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
அசான்ஜிற்கு எதிராக சட்டரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையானது, சுவீடனில் அவர் மீது குற்றஞ்சுமத்தியவர்களுக்கு "நீதியைப்" பெற்று தருவதுடன் சம்பந்தப்பட்டது என்ற பாசாங்குத்தனத்தை UNWGAD அறிக்கை இல்லாதொழிக்கிறது. டிசம்பர் 2010 இல் அசான்ஜ் லண்டனில் கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் சுவீடன் வழக்கறிஞர்கள் அசான்ஜின்
முழு ஒத்துழைப்புடன் எந்த தருணத்திலும் அவரை எளிதாக நேர்காணல் செய்திருக்கலாம். அதை அவர்கள் செய்யவில்லை ஏனென்றால் அவர்கள் அவரை சுவீடனுக்கு கொண்டு வர வேண்டுமென விரும்பினார்கள், எதற்கென்றால் அவரை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்காகவாகும். அங்கே அவர்கள் அவரது நிஜமான "குற்றமாக" எதை பார்க்கிறார்களோ—அதாவது ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் புரிந்த அழிவுகரமான நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதற்கு அவரை விலை கொடுக்க செய்வதற்காக, அனேகமாக அவரது வாழ்வையே கூட விலை கொடுக்க செய்வதற்காக ஆகும்.
இங்கிலாந்து, அமெரிக்கா, சுவீடன் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் அசான்ஜை மௌனமாக்கும் முயற்சிகளைத் தோற்கடித்து, அவரது உடனடி சுதந்திரத்தைக் கோர இயங்க வேண்டும்.
கட்டுரையாளரின் பரிந்துரைகள்: