Print Version|Feedback
China warns Trump over Taiwan phone call
தாய்வானுடனான தொலைபேசி அழைப்பு குறித்து ட்ரம்பை சீனா எச்சரிக்கிறது
By Peter Symonds
7 December 2016
கடந்த வெள்ளியன்று தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டதன் மூலம் நீண்டகால இராஜாங்க நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 1979 ஆம் ஆண்டு தைப்பேய் உடனான இராஜாங்க உறவுகளை வாஷிங்டன் துண்டித்து கொண்டதன் பின்னர் அமெரிக்கா மற்றும் தாய்வான் தலைவர்கள் கலந்துரையாடுவதில்லை. அத்துடன் சீனாவின் ஒரே சட்டப்பூர்வமான அரசாங்கமாக பெய்ஜிங்கை மட்டுமே அங்கீகரிக்கும் அதன் "ஒரே சீனா" கொள்கையையும் நடைமுறைப்படுத்தியது.
ஆரம்பத்தில் தொலைபேசி அழைப்பு பற்றி முக்கித்துவம் காட்டாத சீன வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஊடகத்தில், பெய்ஜிங் "அமெரிக்க பக்கத்தில் தொடர்புடைய பிரிவினருடன் இணைந்து சம்பிரதாய பிரதிநிதித்துவங்களை உருவாக்கி இருந்தது" என்று தெரிவித்தது. மேலும், ட்ரம்ப் தவறு ஏதும் செய்துவிடவில்லை என்று செய்தி தொடர்பாளர் லு காங்க் கருத்து தெரிவித்ததுடன், "(தாய்வான்) பிரச்சனை மீதான சீனாவின் சம்பிரதாய அணுகுமுறை பற்றி ஜனாதிபதி தேர்வுக் குழுவுக்கு முற்றுமுழுவதாக தெரிந்ததே" என்றார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (Chinese Communist Party - CCP) அரசு நடத்தும் பத்திரிகையான People's Daily, ஒரே சீனா கொள்கையை மீறுவதாலும் மற்றும் அமெரிக்க, தாய்வான் தலைவர்களுக்கு இடையிலான நேரடி தொடர்பை தவிர்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறிப்பதால் இத்தொலைபேசி அழைப்பு "வெறுக்கத்தக்கது" என்று கண்டனம் தெரிவித்து திங்களன்று ஒரு முன்பக்க கட்டுரையை பிரசுரித்தது. இருதரப்பு உறவுகளின் அடித்தளமாக ஒரே சீன கொள்கை இருந்தபோதும், ட்ரம்பின் நடவடிக்கை "சீன அமெரிக்க உறவுகளின் மையத்தில் ஊடுருவிவிட்டது" என்றும் தெரிவித்தது.
"ட்ரம்பின் நேர்மையற்ற நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளின் அபிவிருத்திக்கு எச்சரிக்கை ஒலி அனுப்பியுள்ளது. சீனா நிச்சயமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று அந்த கட்டுரை அறிவித்தது. "சீன-அமெரிக்க உறவுகளில் பிரச்சனைகளை உருவாக்குவது என்பது அமெரிக்கா தனக்கே உருவாக்கிக்கொள்ளும் நெருக்கடியாகவே இருக்கும்... என்பதை டரம்பும், அவரது இடைக்கால குழுவும் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும், மேலும் இரு நாடுகளின் அளவையும், அவற்றிற்கு இடையே அதிகரித்துவரும் பரஸ்பர நம்பிக்கையையும் கருத்தில் கொண்டு, சீனாவுக்கு நெருக்கடிகளை உருவாக்குவது அமெரிக்காவை 'தலைசிறந்ததாக' ஆக்காது" என்றும் எச்சரித்தது.
மேலும், "சீனாவின் இறைமைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் பெரும் முக்கியத்துவம்" கொண்டிருக்கும் ஒரு "முக்கிய நலனாக" தாய்வான் இருந்ததெனவும் இந்த கட்டுரை மீண்டும் வலியுறுத்தியது. 1949 சீன புரட்சிக்கு பின்னர் தோற்கடிக்கப்பட்ட கோமின்டாங்கினர் (Kuomintang - KMT) அடைக்கலம்புகுந்த ஒரு பிரிந்துபோகவிரும்பும் மாகாணமாக தாய்வானை பெய்ஜிங் கருதுவதுடன், தாய்வான் அரசாங்கம் எப்பொழுதாவது முறையான சுதந்திரத்தை பிரகடனம் செய்யுமானால் இராணுவ வழிமுறைகள் மூலமாக இந்த தீவினை கைப்பற்றிக்கொள்ளும் என்றும் தெரிவித்தது.
சாய் உடன் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டதென்பது ஒரு முட்டாள்தனமானதல்ல. ஆனால், சீனாவுடனான அமெரிக்க உறவுகளை மறுஒழுங்கமைக்கும் நோக்கத்துடன் அவரது நிர்வாகம் சீனாவிற்கு அறிவிக்கும்வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நனவான ஆத்திரமூட்டலாக இந்த அழைப்பு இருந்தது. தாய்வானுடன் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளவருமான, வரவிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியான ரியன்ஸ் பிரைபஸ், ட்ரம்ப், சாய் உடன் பேசிகொண்டிருந்தபோது "என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை துல்லியமாக அறிவார்" என்று ஊடகத்திற்கு தெரிவித்தார். அடுத்து வந்த ட்வீட்களில், சீனாவை ஒரு செலாவணி மோசடி செய்யும் நாடாக முத்திரைகுத்தியும், தென்சீனக் கடல் பகுதிகளில் அதன் "பாரிய இராணுவ தளத்தை" மீண்டும் கண்டனம் செய்தும், ட்ரம்ப் தனது உரையாடல் குறித்த கவலைகளை நிராகரித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, சீனாவை ஒரு செலாவணி மோசடியாளராக பிரகடனப்படுத்தவும், சீன இறக்குமதிகள் மீது 45 சதவீத வரி விதிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறினார்— இது ஒரு வணிகப் போரை தூண்டும் நகர்வுகளாக அமைய முடியும்.
தென்சீனக் கடல் தொடர்பாக பெய்ஜிங் உடனான ஒபாமாவின் மோதல்களை வலிமையாக்க ட்ரம்பின் நிர்வாகம் உத்தேசித்துள்ளது என்பதற்கு தென்சீனக் கடல் பற்றிய ட்ரம்பின் குறிப்பு மற்றுமொரு அறிகுறியாக உள்ளது, மேலும் சீனா உரிமைகோரும் நீர்நிலைகளான அங்குதான் அமெரிக்க கடற்படை ஏற்கனவே மூன்று "தடையற்ற சுதந்திர போக்குவரத்து" ஊடுருவல்களை நடத்தியுள்ளது. சீனா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க அளவில் மீழ்உரிமை கோருவதிலும், மற்றும் தனது கட்டுப்பாட்டின் கீழ் சிறுதீவுகளை கட்டியெழுப்புவதிலும் ஈடுபட்டிருந்தபோதும், அது கட்டியெழுப்பிய ஒரு பிரமாண்டமான இராணுவ தளத்தை வெறும் பொய்யானது என்று கூறுகிறது.
ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" எனும் சீன எதிர்ப்பு கொள்கையை போதுமான ஆக்கிரோஷத்துடன் முன்னெடுக்காதற்காக ஒபாமா நிர்வாகத்தை விமர்சித்து வந்த குடியரசுக் கட்சிக்குள் உள்ள தட்டுக்கள், ஊடகம் மற்றும் இராணுவ உளவுத்துறை அமைப்பு போன்றதான பிரிவினர் தாய்வானுடனான ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்கு பரந்த அளவில் ஆதரவாக இருந்து வந்துள்ளனர்.
ட்ரம்பின் ஒரு பொருளாதார ஆலோசகரான ஸ்டீபன் மூர், தனது கண்ணோட்டத்தை மிக குரூரமாக வெளிபடுத்தியதுடன், "நாம் தாய்வானுடன் இணைந்து நிற்போம்" கிழக்கில் போர்முரசு கொட்டிக் கொண்டிருக்கும் அவர்களது வழியில் சீனாவில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்று பார்க்கிறோம், மேலும் ரீகன் என்ன செய்தாரோ அதையே நாம் செய்ய வேண்டிய நேரம் இது: நாங்கள் அச்சுறுத்தல்களை எதிர்த்து நிற்கிறோம், மேலும் நாங்கள் உங்களை இதனை செய்யவிட்டுகொண்டிருக்க போவதில்லை." என்று திங்களன்று, அறிவித்தார்.
"சீனா இதனை விரும்பவில்லை என்றால், ம் திருகு" என்று மேலும் சேர்த்துக்கொண்டார்.
இத்தகைய கருத்து வெளியிடும் பாணி, கிழக்கு ஆசியாவில் ஏற்கனவே உள்ள பதட்ட நிலைமையை தனது பங்கிற்கு பன்மடங்காக உயர்த்துவது மட்டுமல்லாது, சீனாவின் "அச்சுறுத்தல்" மூலமாக மட்டுமல்லாது, மாறாக ஒரு போர் நிகழவிருக்கும் அபாயம் உள்ளபோதும் கூட ஆசியா முழுவதிலும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஒரு இடைவிடாத அமெரிக்க இராஜதந்திரம் மற்றும் இராணுவ கட்டியெழுப்புதல் போன்ற அமெரிக்க நலன்களுக்கு சீனாவை அடிபணிய செய்யும் நோக்கமும் அதிகரித்துள்ளது.
முதலாளித்துவ மீட்சியால் இலாபமடைந்துள்ள பெருஞ்செல்வந்தர்களின் தன்னலகுழுவின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சீன ஆட்சி, சீனாவிலோ அல்லது சர்வதேரீதியாகவோ தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்புபையும் விட இயல்பாகவே இலாயக்கற்றதாகும். அதன் இராணுவ விரிவாக்கம் வாஷிங்டனின் கைகளில் சாதகமாக பயன்படுவதுடன் போர் அபாயத்தையும் உயர்த்துகின்றது.
தனிமைப்படுத்துதலில் இருந்து எந்தவிதத்திலும் பின்வாங்குவதற்கு அப்பாற்பட்டு, சீனா உடனான அமெரிக்க மோதல் போக்கை தீவிரப்படுத்தும் நோக்கங்கள் அனைத்தையும் ட்ரம்ப் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். சீனாவுடனான போருக்கு அமெரிக்க இராணுவத்தை விரிவாக்க, அதிலும் குறிப்பாக பென்டகனின் வான்-கடல்வழி போர் மூலோபாயத்தை மையமாக கொண்டிருக்கும் அமெரிக்க கடற்படையை விரிவாக்கும் திட்டத்தை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
மேலும், ட்ரம்பின் கொந்தளிப்பான உரை, ஸ்தாபிக்கப்பட்ட இராஜதந்திர விதிமுறைகளின் மீது பொறுப்பற்ற தன்மையையும், அலட்சிய போக்கினையும் கொண்டிருப்பதுடன், உலக அரசியலில் ஒரு புதிய நிச்சயமற்ற தன்மையையும், ஸ்திரமின்மையையும் சேர்க்கிறது. இதனால் புவிசார் அரசியலில் இன்னும் பெரும் அளவிலான அழுத்தங்களை மட்டுமே அதிகரிக்க முடியும். மேலும், சீனா மீது இன்னும் ஒரு மிக ஆக்ரோஷமான கொள்கைக்கு ஆதரவாக உள்ளவர்கள் மத்தியிலும் இதில் பாரிய ஆபத்து உள்ளடங்கியுள்ளது என்ற ஒரு அங்கீகாரமும் இருக்கிறது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா-சீனா உறவுகளில் "அதிகபட்ச முன்னறிந்து கொள்ளும் தன்மையை" ஒபாமா கொண்டுவந்திருக்கலாமென முந்தைய CIA ஆய்வாளர் கிறிஸ்தோபர் ஜோன்சன் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு தெரிவித்தார். "ஓரளவு முன்கணிப்பதென்பது ஒரு நல்ல விடயமே, ஆனால் அதிகளவு முன்கணிப்பதென்பது என்பது அச்சமூட்டுவதாக உள்ளது. நல்லவிதமாக முன்னறிந்துகொள்ளும் தன்மைக்கும், அச்சமூட்டும் அளவிலான முன்னறிந்துகொள்ளும் தன்மைக்கும் இடையில் ஒரு நல்ல வரையறை இருக்கிறது, மேலும் அந்த சமநிலைதான் கண்டுபிடிக்கப்படவேண்டும்," என்று கூறுகிறார்.
ட்ரம்பின் அதிதீவிர வலதுசாரி தேசியவாதமும், மற்றும் உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே ஒரு வர்த்தக போரை தூண்டுவதற்கு வகைசெய்யும் "அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்ததாக்குவோம்" போன்ற வாயடிப்புடன் கூடிய அச்சுறுத்தல்கள் மூலம் உலக பொருளாதாரத்தை ஆழ்ந்த மந்தநிலைக்குள் மூழ்கடிக்க முடியும். வர்த்தக போர் என்பது போருக்கு வழிவகுக்கிறது. பொருளாதார வழிமுறைகள் மூலமாக தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தவிர்க்க முடியாமல் இராணுவத்தை பலத்தையே நாடும்—கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இதையே செய்ய செய்துகொண்டிருக்கிறது.
ஆசியாவிலும் உலகெங்கிலும் அமெரிக்கா மேலாதிக்கத்தை அடைவதற்காக, எந்தவித அல்லது அனைத்துவிதமான வழிமுறைகளையும் பிரயோகித்து சீனாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த, ட்ரம்ப்பினதும் அவரது இராணுவவாத ஆலோசகர்களதும் உறுதிப்பாடு, அணு-ஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு பகிரங்கமான முரண்பாட்டினையும், மோதலையும் தூண்டிவிடும்.