Print Version|Feedback
David North speaks in London on Donald Trump’s election
டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் தொடர்பாக டேவிட் நோர்த் லண்டனில் பேசுகிறார்
By our correspondents
19 December 2016
உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் சனிக்கிழமை லண்டனில் ஆற்றிய உரையைக் கேட்க சுமார் 100 தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
நோர்த்தின் உரையானது டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கான காரணத்தையும் அதன் விளைவுகளையும் பற்றி விவரித்தது.
ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவியை விவரிக்கையில், அமெரிக்க முதலாளித்துவத்தின் ஏற்றநிலையுடன் தொடர்புடைய தலைமையை அதன் வரலாற்றுச் சரிவோடு தொடர்புடைய தலைமையோடு நோர்த் வேறுபடுத்திக் காட்டினார். ஆரம்பகாலத்தில், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கமானது ஜோர்ஜ் வாஷிங்டன், தோமஸ் ஜெஃபர்சன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் போன்றோரை உருவாக்க முடிந்தது. “இப்பொழுது” “அவர்கள் ட்ரம்ப்பை உருவாக்குகின்றனர்” என்று நோர்த் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதிப் பதவியின் கருத்துருவும், அது எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதும் அந்த பொறுப்பை வகிக்கும் பண்பு கொண்டோரால் பெரிதும் வடிவமைக்கப்படும் என்று நோர்த் விளக்கினார். ஃபிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட், “சமூகப் பாதுகாப்பை உருவாக்கியவர் என தொழிலாளர் வெகுஜனங்களால் பார்க்கப்பட்டார்.”
ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதன் விளைவுகள் “மகத்தானதாக இருக்கும்” என்று டேவிட் நோர்த் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தார், “நான் இதனை இந்த அறையில் உள்ள இளைஞர்களுக்கு கூறுவேன். உங்களது வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருப்பவற்றால் பெரிதும் மேலாதிக்கம் செய்யப்படப் போகின்றது… அத்தகைய வரலாற்று அபிவிருத்தியின் விளைவுகளுக்கு நீங்கள் தப்ப முடியாது”.
ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்வது, “அமெரிக்க வாழ்க்கையில் உள்ள அனைத்து நோய்வாய்ப்பட்ட, சீர்கேடு, ஒழுக்கக்கேடு, பின்தங்கிய நிலை மற்றும் முட்டாள்தனத்தையாகும். ஆனால் அவர் ஆகாயத்தில் இருந்து வரவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
ஹிலாரி கிளிண்டன், ட்ரம்ப்பை விட கிட்டத்தட்ட 3 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றதை குறிப்பிட்டு, நோர்த் 2000க்கு முந்தைய நிலையை விளக்கினார், “20ம் நூற்றாண்டின் அனைத்து தேர்தல்களிலும் மக்களின் வாக்குகளை மிக அதிகம் பெற்றவரே எப்போதும் தேர்தலில் வெற்றி பெறுவார்.” கடந்த முறை அப்படி அல்ல, 2000க்கு முன் 1888ல்தான் அவ்வாறிருந்தது. அவ்வாறு. இருந்தும் ட்ரம்ப் மக்கள் வாக்கை இழந்ததை ஜனநாயகக் கட்சியினரால் ஒரு பிரச்சினையாகக்கூட எழுப்பப்படவில்லை. அதற்கு பதிலாக வலதுபுறத்தில் இருந்து ட்ரம்ப்பை தாக்குவதிலேயே குறியாயிருந்தனர் அதாவது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கான ஒரு கைக்கூலியாக பார்த்தனர்.
மின்னஞ்சல் ஊடுருவல் என்று கூறப்படும் ஊழல் மீதான பிரத்தியேக கவனத்துடன், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ரஷ்யா ட்ரம்ப்பிற்கு ஆதரவாக தலையீடு செய்ததாக ஆதாரம் எதுவிமின்றிக் கூறிக்கொண்டு, “ட்ரம்ப்பும் அவர் முன்வைக்கும் சமூகப் பொருளாதார கொள்கைகளும் ஒரு முறைகேடு அல்ல” என்று நிரூபித்தனர்.
ஆளும் தட்டுக்குள் அடித்துக்கொள்வதெல்லாம் வெளியுறவுக் கொள்கை மீதான முரண்பாடுகளும் அவை தொடர்பாக ட்ரம்ப் பற்றிய கவலைகளுமே, சீனா மீதான அவரது குவிப்பு, புட்டினுடன் ஒரு பேரத்திற்கு தயாரித்துக் கொண்டிருப்பது ஆகியன, என்றார் நோர்த். “ஹில்லாரி கிளிண்டனை ஆதரித்த ஆளும் தட்டின் ஒரு பிரிவைப் பொறுத்தவரை, (ரஷ்யா) உடனடியான பெரும் அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அல்லது, வேறுவிதமாக கூறுவதானால், சீனாவுடன் நீண்டகால வாய்ப்பில் அணுகுதல் மற்றும் அது வல்லமையாக எழுந்து வருவதன் ஆபத்து அமெரிக்கா முதலில் ரஷ்யர்களுடன் கணக்குத் தீர்ப்பதை வேண்டி நிற்கிறது.”
ட்ரம்ப் மக்கள் செல்வாக்கு அலையின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்துள்ளார் என்ற கூற்றுக்கு பதிலளிப்பது முக்கியம் என்றார் நோர்த். ஜனநாயக கட்சிக்காரர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை, வாழ்க்கைப் பாணி அல்லது அடையாளங்களை ஒன்று திரட்டல் அடிப்படையில்: இன அடையாளம், பாலியல் அடையாளம், பால் அடையாளம் அடிப்படையில் ஒழுங்கமைத்தனர் மற்றும் அதுதான் கூட்டுக்கு அடிப்படையாக இருந்தது. ஜனநாயகக் கட்சியுடனான ஒரு விவாதத்தில், தொழிலாள வர்க்கம் பற்றிய பிரச்சினை திரும்பத்திரும்ப, மேலோட்டமாக வந்தது. பொருளாதார வேண்டுகோளை நாம் விடுக்கவில்லை என்றால் ஆபத்தாகாதா என்று பில் கிளிண்டன்தான் கேட்டார். அது விளைவொன்றும் இலாததாக தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் வர்க்க அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வெண்டுகோள் விடுக்க விரும்பவில்லை.”
இன்னும் சொல்லப்போனால், ஜனநாயகக் கட்சிக்காரர்கள், “மிக சலுகை மிக்க தட்டான 10 சதவீதத்தை நோக்குநிலைப் படுத்தியிருந்தனர்….. இந்த தேர்தல் மூலோபாயம் ஜனநாயகக் கட்சிக்காரர் முகத்தில் குத்துவிட்டது ஏனெனில் அவர்கள் வெறுமனே கழித்துவிட்டனர் மிக முக்கிய மாநிலங்களில் விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் ஓகியோவில் இறுதியில் வாக்கை இழந்தனர்.”
இந்த மாநிலங்களில் வென்றிருந்தால், கிளிண்டன் தேர்தல் கல்லூரியிலும் கூட பெரும்பான்மை பெற்றிருப்பார். போலி இடதுகள் கூறிக்கொள்வதுபோல, ட்ரம்ப் வெற்றி பெற்றது “வெள்ளையின சிறப்புரிமை பற்றிய விளக்கிக் காட்டல்” காரணமாக அல்ல, மாறாக ஜனநாயக் கட்சி வாக்கு பொறிந்ததால் ஆகும்.
நோர்த் தொடர்ந்தார், பாராக் ஒபாமா 2008ல் பெருமளவில் மக்கள் வாக்குளை வென்றார். “இனவாத வெள்ளையர்” என்று கூறப்படும் ஒரு பரந்த பகுதியானது முதல் ஆபிரிக்க-அமெரிக்கரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது மற்றும் மீண்டும் தேர்நெதடுத்தது”, ஏனெனில் அவர்கள் ‘மாற்றத்தை நீ நம்பு’ என்ற முழக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அது 2008ல் ஏற்பட்ட பொருளாதாரப் பொறிவின் சகாப்தமாக இருந்தது, அதுதாமே ஒரு நீண்டகால பொருளாதார சீரழிவின் உற்பத்திப் பொருளாய் இருந்தது, அவர்கள் ஒபாமாவுக்காக வாக்களித்தனர்……. அந்தவகையான எதுவும் நிகழவில்லை. அவர் ஜனாதிபதியாகி வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்கு அபரிமிதமான அளவில் சேவை செய்தார்.”
தேர்தல் உண்மையில் மக்கள் தொகையில் இடதுபுறத்துக்கு ஆழமான நகர்வைப் பிரிதிநிதித்துவம் செய்கிறது என்று நோர்த் விளக்கினார். ஜனநாயகக் கட்சிக்கான ஆரம்பநிலை தேர்தல்களில், செனெட்டர் பேர்னி சான்ட்ரஸ் அவரது கூற்றான “ஜனநாயக சோசலிஸ்ட்” ஆக இருப்பதாக மற்றும் “பில்லியனர் வகுப்பு” தொடர்பான அவரது கண்டித்தல்கள் அடிப்படையில் கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் வாக்களித்திருந்தனர்.
உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர், 1928ல் வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு ஒரு ஆண்டு முன்பாக லியோன் ட்ரொட்ஸ்கி செய்த ஆய்வைக் குறிப்பிட்டார்: “வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும் ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே கூட நடக்கலாம், அதேபோல அமைதியான முறையிலோ அல்லது போர் மூலமாகவோ நடக்கலாம், எப்படியாயினும் பிரதானமாக ஐரோப்பாவின் நலன்களை பலியிட்டே அமெரிக்கா தனது சிக்கல்களில் இருந்தும் நோய்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முனையும்.”
அந்த வார்த்தைகள் இன்று ஆழமான உடனடித் தன்மையை எடுக்கின்றன, என்றார். செல்வத்தட்டின் அமைச்சரவைக்கு ஒரு பில்லியனர் தலைமை வகிக்கிறார். இதுவரை அதற்குப் பெயர் அறிவிக்கப்பட்டவர்கள் மொத்தமாக 14 பில்லியன் பவுண்ட்டுகளுக்கும் அதிகம் செல்வம் கொண்டவர்கள். அவர்கள் உழைக்கும் மக்களுக்கு எதிராக ஒரு வர்க்க யுத்தத்தை பின்பற்றுவார்கள். கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றப் பொறுப்பில் சிக்கிய மூத்த இராணுவ நபர்களை அவர் பொறுப்புக்களில் நியமித்தது, அமெரிக்க இராணுவத் திறத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் பொருளாதாரப் போட்டியாளர்களை எதிர்கொள்ள அவர் முயற்சிப்பார் என்பதையே காட்டுகிறது.
எங்கே அமெரிக்கா போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு பதில் கூறுகையில் நோர்த் கூறினார், “சர்வாதிகாரத்திற்கு, போருக்கு மற்றும் அனைத்திற்கும் மேலாக புரட்சிக்கு” என்றார்.
அவர் முடிவாகக் குறிப்பிட்டார், “1941ல் முதலாளித்துவ முரண்பாடுகளுக்கு ஒரு யுத்தத்தின் மூலம் ஆளும் தட்டுக்கள் பதிலளித்தன. 1917ல் அந்த முரண்பாடுகளுக்கு தொழிலாள வர்க்கம் ரஷ்யாவில் ஒரு புரட்சியின் மூலம் பதிலளித்தது. அவ்வகையான பண்புடைய இன்னொரு காலகட்டத்தில் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம், ஆனால் பெரிய அளவில். எமது சகாப்தம் வெறுமனே சோசலிச சகாப்தம் மட்டுமல்ல, மாறாக உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தமாகும். அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் எழுச்சிகள் உலக ரீதியாக பிரமாண்டமான வெடிப்புக்களை உற்பத்திசெய்யாது என எவரும் நம்புகிறீர்களா? ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது, ஒருவர் சூழ்நிலையை நினைக்கையில், பிரிட்டனில் உள்ள நெருக்கடிக்கு, பிரான்ஸில் உள்ள நெருக்கடிக்கு, ஆஸ்திரியா அல்லது இத்தாலியில் அபிவிருத்தி அடைந்துவரும் நெருக்கடிகளுக்கு தெளிவான இணைநிகழ்வுகள் அங்கே இல்லையா?
“அமெரிக்காவில் இருப்பதைப்போலவே, இங்கும் மக்களின் ஆழமான அதிருப்தியின் வளர்ச்சியைப் பார்க்கிறோம். இந்தப் பிரச்சினைகளுக்கான விடை, லெனினால் அபிவிருத்தி செய்யப்பட்ட, அனைத்திற்கும் மேலாக ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட புரட்சிகர மார்க்சிசத்தின் அடிப்படைக் கருத்துருக்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு அரசியல் தலைமையைக் கட்டி எழுப்புதல் மூலமாக மட்டுமே அளிக்கப்பட முடியும். தொழிலாள வர்க்க எழுச்சி தவிர்க்கமுடியாதது என நாம் நம்புகிறோம். அது ட்ரம்ப்புகள் மூலமாக, இங்கு பிரிட்டனில் தேசியவாதத்தை ஊக்குபவர்கள் மூலம், பிரான்சில் லூ பென் மூலம் அது பார்க்கப்படும். இந்த வேலைத் திட்டங்களின் மோசடியும் திவாலும் மிக விரைவில் அம்பலமாகும்.”
அவர் வலியுறுத்தினார், சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் “தொழிலாள வர்க்கத்தின்பாலும், முன்னேறிய இளைய பகுதியினர் பாலும் கட்டாயம் திரும்பும். நாம் சோசலிச மாற்றீட்டை வழங்குவோம்.”
நோர்த்தின் விரிவுரை உற்சாகத்தாலும் நீடித்த கைதட்டல்களாலும் வாழ்த்தி வரவேற்கப்பட்டது. வினா- விடைப் பகுதியில், பார்வையாளர் உறுப்பினர்கள் நோர்த்திடம் இன்று தொழிலாள வர்க்கத்தின் சேர்க்கை தொடர்பாக, தேர்தல் கல்லூரி முறை, கிளிண்டன் மின்னஞ்சல் களவு பற்றிய ஊழல், ட்ரம்ப்பின் சீன எதிர்ப்புக் கொள்கையின் விளையபயன்கள் பற்றிக் கேட்டனர்.
கூட்டத்தில் நோர்த்தின் சொந்த படைப்புகள் உள்பட 300 பவுண்ட்ஸ்க்கும் அதிகமான நூல்கள் விற்கப்பட்டன. சோசலிச சமத்துவக் கட்சியின் வளர்ச்சி நிதியான £100,000 நிதிக்கு கிட்டத்தட்ட 4,500 £ திரட்டப்பட்டது.