Print Version|Feedback
India moves to enhance strategic ties with Japan and Israel
ஜப்பானுடனும் இஸ்ரேலுடனும் இந்தியா மூலோபாய கூட்டுக்களை விரிவாக்க முனைகிறது
By Deepal Jayasekera
28 November 2016
சமீபத்திய வாரங்களில் இந்தியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான ஜப்பானுடனும் இஸ்ரேலுடனும் தனது மூலோபாய கூட்டுக்களை விரிவாக்கும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியாவின் பிரதான போட்டியாளர்களான சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு எதிராக பரந்த ஆசியா மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியங்களின் மீதான இந்திய உயரடுக்கின் வல்லரசாகும் அபிலாஷைகளை தீவிரமாக முன்னெடுப்பதை நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கைகள் உள்ளன. அதே நேரத்தில், ஆசியா-பசிபிக் இல் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்க முதன்மை கூட்டணிகள் உடனான நெருங்கிய இருதரப்பு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்புகளை அபிவிருத்தி செய்வது உட்பட, சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதல்களில் இந்தியா எப்போதும் நெருக்கமாக இணைந்திருப்பதின் ஒரு அங்கமாகவும் இவைகள் இருக்கின்றன.
நவம்பர் 11-12ல் மோடி மேற்கொண்ட ஜப்பான் விஜயத்தின்போது, அவர் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே உடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டதுடன், இந்திய ஜப்பானிய பொருளாதாரம் மற்றும் இராணுவ உறவுகளை அதிகரிக்க செய்யும் பல இருதரப்பு ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டார். புது தில்லி மற்றும் டோக்கியோ இருவரும் ஒருவர் மற்றொருவரது புவிசார் அரசியல் இலட்சியங்கள் மீது கொண்டுள்ள பரஸ்பர ஆதரவை உயர்த்திக் காட்டும் வகையில், பேச்சுவார்த்தைகளின் முடிவில் மோடி மற்றும் அபே இருவரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவர்களது பேச்சுவார்த்தைகளின்போது, இந்தியாவின் "கிழக்கு கொள்கை நடைமுறை" (Act East Policy) என்பதன்கீழ் "பிராயந்தியத்தில் பிரதம மந்திரி மோடியின் சுறுசுறுப்பான ஈடுபாடு குறித்து அபே பாராட்டினார்." அதேபோல, "சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மூலோபாயம்" என்பதன்கீழ் "பிராந்தியத்தில் ஜப்பானின் மிகச்சிறந்த ஈடுபாடு குறித்து மோடியும் பாராட்டினார்." மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் "ஆழமான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடலுக்கும்" உள்ள சாத்தியங்களை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர் என்பதையும் தெரிவித்தது.
வளர்ந்துவரும் இந்தியா ஜப்பான் கூட்டணியின் பிரதான இலக்காக சீனா உள்ளது என்பதை குறிப்பிட்டு, வாஷிங்டனுக்கு பொருத்தமான தென் சீனக் கடல் சர்ச்சைகள் குறித்த அபே மற்றும் மோடியின் நிலைப்பாட்டினை கூட்டு அறிக்கை வலியுறுத்தியது. "தடையற்ற கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து சுதந்திரம்" குறித்து சீனா அச்சுறுத்திவருகிறது என்ற அமெரிக்காவின் கூற்றையே இந்த அறிக்கையும் திரும்ப திரும்ப கூறியது. இந்த கூற்று சீன கடலோரங்களில் பென்டகன் போர் கப்பல்களை வைத்திருப்பதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கான ஒரு வெளிப்படையான சாக்காக இருக்கிறது. அதனால் சீனாவுடன் போர் அல்லது போர் நெருக்கடி ஏற்பட்டால் தடைகளை சுமத்தவும் அல்லது வான்வழி கடல்வழி போர் திட்டத்தை செயல்படுத்தவும் இயலும் என்பதாகும்.
மோடியின் ஜப்பான் விஜயத்திற்கு சற்று முன்னதாகவே, தென் சீனக் கடல் சர்ச்சைகளில் ஜப்பானை ஈடுபடுத்தவேண்டாம் என்று சீனா இந்தியாவை வெளிப்படையாகவே எச்சரித்திருந்தபோதும் மோடி மற்றும் அபே இன் முடிவு இந்த சர்ச்சைகளையே முன்னிலைப்படுத்தியது குறிப்பாக ஆத்திரமூட்டுவதாகவே இருக்கிறது.
இந்த கோடையில் ஒரு "ஆட்சி மாற்றம்" என்ற சூழ்நிலை அடிப்படையில் பியோங்யாங் க்கு எதிரான போராக அமெரிக்கா தென் கொரியாவுடன் நடத்திய பாரிய இராணுவ பயிற்சி உட்பட, வட கொரியாவிற்கு எதிரான சமீபத்திய அதன் ஆத்திரமூட்டுதல்களையும் மோடி மற்றும் அபே இருவரும் பின்தொடர்ந்தனர். இந்த அறிக்கை, "வட கொரியா அதன் அணுஆயுதங்கள் மற்றும் குண்டுவீசும் ஏவுகணை திட்டங்களை தொடர்ந்து அதிகரித்து வருவதை கடும் வார்த்தைகளில்" கண்டனம் செய்கிறது. பெய்ஜிங்கிற்கு நெருக்கடி கொடுப்பதற்கும் மற்றும் அதற்கு எதிரான இராணுவ தயாரிப்புகளை நியாயப்படுத்தும் ஒரு வழிமுறையாகவும், வாஷிங்டன் தொடர்ந்து வட கொரியா உடனான மோதல்களை பயன்படுத்தி வந்திருக்கிறது.
மோடியின் ஜப்பான் விஜயத்தின்போது, ஜப்பான் அணுஆயுத தொழில்நுட்பம் இந்தியாவிற்கு கிடைப்பதை அனுமதிக்கும் ஒரு உள்நாட்டு ஆணுஆயுத ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்தானது என்பது மிக முக்கியமான நிகழ்வாகும். அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty-NPT) கையெழுத்திடாத ஒரு நாடாக இந்தியா இருப்பதும், அதுவும் கணிசமான அளவிலான பொதுமக்கள் எதிர்ப்பும் அங்கிருக்கின்ற நிலையில், முதல்முறையாக அவ்வாறான ஒரு நாட்டுடன் ஜப்பான் ஒரு உள்நாட்டு ஆணுஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த பொதுமக்கள் எதிர்ப்புக்கு காரணம், அணுஆயுத தாக்குதலுக்கு பலியானதும் மற்றும் 2011ல் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட பேரழிவு ஆகியவற்றை சந்தித்த ஒரே நாடாக ஜப்பான் இருப்பதேயாகும்.
ஜப்பான் பெரு வணிகங்களுக்காக பெரு இலாபங்களை சாத்தியப்படுத்துவது என்பதே, இந்தியா உடனான அணுசக்தி வர்த்தகத்தின் மீதான உள்நாட்டு எதிர்ப்பை அபே அரசாங்கம் நிராகரிக்க தயாராக இருந்ததற்கான காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அங்கும் பெரிய அளவிலான இராணுவ மூலோபாய கணிப்புக்களும் இருந்தன. அதேபோன்று, புது தில்லி மற்றும் வாஷிங்டன் இடையே 2008ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு உள்நாட்டு அணுசக்தி ஒப்பந்தம் ஒரு "உலகளாவிய இந்திய அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையை" உறுதிப்படுத்துவதில் முக்கியமாக இருந்தது. 2008 ஒப்பந்தம் போல, ஜப்பான் இந்தியா அணுஆயுத ஒப்பந்தமும், புது தில்லி அதன் அணுஆயுத தளவாட உருவாக்கம் மீதான உள்நாட்டு அணுசக்தி திட்டத்தில் ஒருமுகப்பட உதவும். இன்னும் இந்தியா, அதன் முதலாவது உள்நாட்டிலேயே கட்டப்பட்ட அணு நீர்மூழ்கி கப்பலினை அறிமுகப்படுத்தியதன் மூலம், "அணுஆயுத முக்கூற்றுத்தொகுதி" என்பதையும் நிறைவு செய்துவிட்டது, அதனால் தற்போது வான், தரை மற்றும் நீருக்கடியில் என மூன்று வழிகளிலிருந்தும் அணுஆயுதங்களை ஏவ முடியும் என்று கடந்த மாதம் இந்தியா பெருமை பேசியது.
அணுஆயுத பரவல் குறித்த கவலைகளை குறைக்காட்டுவதற்கான ஒரு முயற்சியாக, பொதுதேவைக்கான அணுஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பிற்சேர்க்கையாக புது தில்லி அணுஆயுத சோதனைகள் மீதான ஒரு "தானாகவே நிறுத்திவைப்பது" குறித்த அதன் அர்ப்பணத்தை வலியுறுத்தியது. அதேநேரத்தில் டோக்கியோ, ஒருவேளை இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் அணுஆயுத சோதனை நடத்துமானால் இந்த ஒப்பந்தத்தினை முறித்துக்கொள்ளும் "உரிமை" அதற்கு உள்ளது என்றும் நிர்ணயித்துள்ளது.
மோடி விஜயத்தின்போது, இரு நாடுகளும் அவர்களது இராணுவ உறவுகளை இன்னும் விரிவாக்க முனைந்தனர். கூட்டு அறிக்கையின்படி, அபே மற்றும் மோடி இருவரும், "பாதுகாப்பு கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றிக்கொள்வது தொடர்பானது மற்றும் இரகசிய இராணுவ தகவல் பாதுகாப்பு குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பானது போன்ற இரண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருவதை வரவேற்றனர்."
வெளிநாட்டு ஆயுத விற்பனை மீதான தடைகளை ஜப்பான் நீக்கிய பின்னர், முதலாவதாக அதனுடன் செய்யப்பட்டுள்ள ஆயுத பேரங்களில் ஒன்றான 12 ஜப்பானில் கட்டபட்ட தரைவழி நீர்வழி இரண்டிலும் செல்லக்கூடிய கண்காணிப்பு விமானங்களின் கொள்முதல் இறுதிகட்டத்தில் உள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டது.
"இந்தியா, ஜப்பான் இரு நாடுகளின் பிரதம மந்திரிகளும், ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா மத்தியிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை வரவேற்றனர், அதனால் மனிதநேய உதவிகள் மற்றும் பேரழிவு நிவாரணம் (HA/DR), பிராந்திய இணைப்பு, அத்துடன் கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற பகுதிகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பும் வலுப்படும்" என்று இந்த அறிக்கை குறிப்பிடுவதிலிருந்து அமெரிக்க தலைமையிலான சீன எதிர்ப்பு கூட்டணியில் இந்தியாவின் கூடுதலான ஒருங்கிணைப்பு இருக்கும் என்பது தெளிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. இரு நாடுகளின் பிரதம மந்திரிகளும், ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மத்தியில் உள்ள தொடர்ந்த மற்றும் ஆழமான முத்தரப்பு பேச்சுவார்த்தையினையும் வரவேற்றுள்ளனர்.
மோடியின் ஜப்பான் விஜயம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், இஸ்ரேல் ஜனாதிபதி ருவென் ரிவ்லின் இந்தியாவிற்கு ஆறு நாட்கள் விஜயம் மேற்கொண்டார். இரண்டு தசாப்த காலங்களில் ஒரு இஸ்ரேல் பிரதமர் இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும். 2017 இன் ஆரம்பத்தில் மோடியின் இஸ்ரேல் விஜயத்திற்கு வழிவகுக்க செய்வதே இதன் முதன்மையான நோக்கம் என்பது பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அவ்வாறு இருக்குமானால் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யும் முதல் இந்திய பிரதம மந்திரியாக அவர் இருப்பார்.
இந்தியாவின் முந்தைய காங்கிரஸ் தலமையிலான அரசாங்கம் இஸ்ரேல் உடனான நெருங்கிய உறவுகளை தொடர்ந்தபோதும், மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம் அவர்களது முக்கிய வெளியுறவு கொள்கை இலக்குகளில் ஒன்று என்ற வகையில் டெல் அவிவ் உடன் புது தில்லி இன் இராணுவ மூலோபாயம் மற்றும் பொருளாதார உறவிலும் விரிவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்துமத மேலாதிக்கவாத, முஸ்லீம் எதிர்ப்பு பிஜேபி மற்றும் இஸ்ரேல் சியோனிச வலது அவற்றிற்கு இடையில் அதிகரித்துவரும் கருத்தியல் ரீதியான உறவு, இந்திய இஸ்ரேல் கூட்டணியை மேலும் முன்னெடுப்பதில் வகித்துள்ள பங்கு குறைவானது அல்ல. இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளை முறையே தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கிற்கான அதன் முக்கிய கூட்டுக்களாக கருதி, அமெரிக்கா அவற்றிற்கு இடையிலான வலுவான உறவுகளுக்கு இன்னும் தெளிவான ஊக்கமளித்துள்ளது.
செப்டம்பர் 2014ல் நியூ யோர்க்கில், இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெடன்யஹு மோடியை சந்தித்தபோது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவிற்கு "வானமே எல்லை" என்று அவர் மிகைப்படுத்தினார். இந்த சந்திப்பினை தொடர்ந்து, பிப்ரவரி 2015ல் முதன்முதலில் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சராக, மோஷே யா'லோன் விஜயம் செய்தார்; அந்த வருட இறுதியில் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார்; மேலும் 2016 தொடக்கத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார்.
மோடி தலைமையின்கீழ் இந்திய இஸ்ரேல் உறவுகள் வலுப்படுத்தப்படுவது குறித்து, நவம்பர் 18ல் இந்திய ஆங்கில மொழி தினசரி Pioneer இன் ஒரு ஆசிரிய தலையங்கத்தில் பாராட்டி எழுதப்பட்டுள்ளது: அதன் விவரம் பின்வருமாறு: "இந்திய இஸ்ரேல் உறவுகளில் நீண்டகாலமாக நடத்தப்பட்ட சமநிலைப்படுத்தும் நடைமுறைகள் தற்போது மறைந்துவிட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்துடன், பனிப்போர் நாட்களில் இருந்த சித்தாந்த தடைகள் முறிக்கப்பட்டு, இந்தியாவின் நிதானமான இராஜதந்திர ஸ்தாபகம் என்னும் சகாப்தம், நாடுகள் சுறுசுறுப்பாக ஈடுபாடு கொள்வதன் மூலம் முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது.
கடந்த இரண்டு தசாப்தகளாக இந்தியாவிற்கு பிரதான ஆயுத விநியோகஸ்தராக இஸ்ரேல் இருந்துள்ளது. உண்மையில், இஸ்ரேலின் இராணுவ உபகரணங்களை பெருமளவில் வாங்கும் உலகின் மிகப்பெரிய வாங்குனராக புது தில்லி இருக்கிறது. இந்த மாதம் இஸ்ரேல் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது, அவரது அரசாங்கம் ஆயுதங்கள் இணை உற்பத்தியினை இன்னும் விரிவுபடுத்த தயாராக உள்ளதாக குறிப்பிட்டார். இதன் பின்னர், ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தி பங்காண்மை ஊடாக, இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை இன்னும் "மிகவும் பரந்தளவினதாக" நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டது என்று மோடி கூறினார்.
ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆயுத அமைப்புக்கள் உள்ளிட்ட வகையில் ஆயுதங்கள் இஸ்ரேலிருந்து இந்தியாவிற்கு வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் மதிப்பிற்கும் மேலாக விற்பனையாகின்றது. கூடுதலாக, டெல் அவிவ் சீனாவிற்கும் ஆயுத தளவாடங்களை விற்பனை செய்து வருவதால் இஸ்ரேலின் அதி நவீன ஆயுதங்களை வாங்க இந்தியா மட்டுமே தகுதிபெறும் என்ற உத்திரவாதத்திற்கு புது தில்லி அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று சில இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்தி ஊடகத் தகவல்களின்படி, புதி தில்லி, பாகிஸ்தான் உடனான ஒரு போருக்கு அதனை தயார்படுத்திக்கொள்ளும் விதமாக சமீபத்திய வாரங்களில் இஸ்ரேல் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்பிலான அவசர கொள்முதல் ஆணைகளை விடுவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, தெற்கு ஆசியாவின் அணுஆயுதமேந்திய போட்டியாளர்கள் அதிகரித்துவரும் எல்லை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.