Print Version|Feedback
සයිටම් වෛද්ය විද්යාලය රජයේ සහ පුද්ගලික අංශයේ ව්යවසායක් ලෙස ඉදිරියට ගෙනයෑමේ තැතක්
சய்டம் மருத்துவக் கல்லூரியை அரசாங்கத்தினதும் தனியார்துறையினதும் நிறுவனங்களாக முன்னெடுக்கும் முயற்சி
Manusha Fernando
19 August 2016
மாலம்பேயில் உள்ள தெற்காசிய மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SAITM) வைத்திய பீடத்தை அரசாங்கத்தினதும் தனியார் துறையினதும் நிறுவனங்களாக கொண்டு நடத்துவது குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாயும், அது தொடர்பாக எதிர்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாயும் போக்குவரத்து மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கடந்த தினங்களில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவும் தானும், அரசாங்க பல்கலைக்கழகங்களின் வைத்திய பீடாதிபதிகள் எட்டுப்பேருடன் இந்த கலந்துரையாடலை நடத்தியதாகவும், உயர் கல்வி சம்பந்தமாக தனியார் துறையில் முதலீட்டை ஈர்த்துக் கொள்வதற்க்காக, அரசாங்கத்தினதும் தலையிட்டுடன் இத்தகைய மாதிரியை பரீட்சித்துப் பார்க்கவுள்ளதாகவும் அவ்விடத்தில் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக வளர்ச்சியுறும் மாணவர்களின் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், கல்வியை தனியார்மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை மாற்று ரூபத்தில் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் புதிய பிரேரணையின் நோக்கமாகும்.
எவ்வாறயினும், சய்டம் வைத்திய பீடத்தின் போதனா மருத்துவமனை தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு கானும் வரை, புதிய மாணவர்களை சேர்ப்பதை நிறுத்தி வைக்கும்படி மேற்குறித்த கலந்துரையாடலின் போது வைத்திய பீடாதிபதிகள் விடுத்த கோரிக்கை கிரியெல்ல உள்ளடங்கலான அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சய்டம்மில் முதலாவது மருத்துவ மாணவர்கள் பட்டப்படிப்பினை முடித்திருப்பினும், அவர்கள் பயிற்சி பெற்ற பெர்ணாந்து மருத்துவ மனையானது போதனா வைத்தியசாலைக்கு உரிய தரத்தைப் பெற்றிராத காரணத்தால் அவர்களை வைத்தியர்களாக ஏற்றுக்கொள்ளாமல் இருக்க வைத்திய சபை தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினதும் கிரியெல்லவினதும் பக்க பலத்துடன், வைத்திய சபையின் அனுமதியை புறக்கனித்து செல்ல தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க சய்டம் முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (அ.வை.அ.ச) கடந்த 27 அன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சய்டம் பட்டப்படிப்பு தொடர்பாக வைத்திய சபையினதும் அ.வை.அ.சங்கத்தினதும் எதிர்ப்பானது, போதனா மருத்துவமனையின் தரம் சம்பந்தப்பட்ட பிரச்சணையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது தனியார்மயமாக்கலுக்கு எதிரானது அல்ல.
அரசாங்கத்தின் தனியார்மயப்படுத்தலுக்கு வழியமைக்கும் அவர்களது எதிர்ப்பானது வைத்திய தொழிலானது ஏனைய தொழில்களை விட மேன்மையான ஒன்று என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம், தமது சமூக பொருளாதார வரப்பிரசாதங்களை தக்கவைத்துக்கொள்வதுடன் பிணைந்துள்ளது.
அ.வை.அ.ச. மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் பின், அச் சங்கத்தின் இயக்குனர் வைத்தியர் நலிந்த ஹேரத் “சய்டம் நிறுவனம்” தரத்தை ஏற்படுத்திக்கொள்வதாக தெரியவராத காரணத்தால், அதனை “அரசாங்கம் பொறுப்பெற்றுக் கொள்ள வேண்டும்” என தான் கலந்துரையாடலின் போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறினார்.
அதே சமயம், அரசாங்க மருத்துவ மனைகளில் நெவில் பெர்ணாந்து மருத்துவ மனையிலும் பார்க்க பிரச்சினைகள் காணப்படுவதாகவும், தேவைப்படின் வைத்திய சபை அனுமதியின்றி சுகாதார அமைச்சருக்கு சய்டம் வைத்திய பட்டதாரி சான்றிதழை அனுமதிக்க முடியும் என்றும், அமைச்சர் எஸ். பீ. திசாநாயக்க கடந்த வாரம் அறிவித்துள்ளார்.
முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கத்தில் கல்வியை தனியார்மயப்படுத்தலை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் ஒன்றென்ற வகையில் 2008 காலகட்டத்தில் சய்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2011 ஆகஸ்ட்டில் உயர் கல்வியமச்சராக விளங்கிய எஸ்.பீ. திசாநாயக்க, வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றின் ஊடாக, இந்த நிறுவனத்திற்க்கும் அதன் பட்டப்படிப்புக்கும், சட்ட ரீதியான அனுமதியை, அரசாங்க வைத்திய சபையின், அ.வை.அ.சங்கத்தின் மற்றும் பல்கலைக்கழக மாணவரதும் எதிர்ப்பை புறக்கணித்தே வழங்கினர். சய்டம் வைத்திய பீடத்தை தவிர, பொறியியல், முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம் போன்ற மூன்று பீடங்கள் இயங்குவதுடன், நாடெங்கிலும் பல்வேறு பாடங்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் இத்தகைய தனியார் நிறுவங்கள் டசின் கணக்காக பரவியுள்ளன. இத்தகைய நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கு, மில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுவதுடன், சய்டம்மில் வைத்திய சான்றிதழ் பெற செலவிடப்படும் தொகை ஏறத்தாழ ஆறு மில்லியன் ரூபாய்களாகும்.
சய்டம் வைத்திய மாணவர்களுக்கு, அரசாங்க வைத்தியசாலைகளில் செயன் முறைப் பயிற்சியை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னர் இணக்கம் தெரிவித்திருப்பினும் அ.வை.அ.சங்கத்தின் எதிர்ப்பின் காரணமாக அது நடைமுறைக்கு வரவில்லை. வைத்தியர்களுக்கு அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்படும் நிலமைகளுக்குள், உத்தியோகபூர்வ வேலையின்போது “தனியார் வைத்திய பீட மாணவருக்கு பயிற்சியளிப்பதன் ஊடாக அவர்களுக்கு எதிராக ஒழுக்க நடவடிக்கை மற்றும் நிறுவன வசதிகளை மீறுதல்” தொடர்பான விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரும் என்றும் “நடமுறைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை” தனியார் வைத்திய பீட மாணவருக்கு அரச சொத்துக்களை “பயன்படுத்தி” கற்பித்தலை தவிர்க்குமாறு அ.வை.அ.சங்கம் கடிதம் மூலம் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கம் இந்த நிறுவனத்தை அரச மற்றும் தனியார்துறை நிறுவனமாக முன்னெடுத்து செல்ல முயல்வது, வைத்திய சபை மற்றும் அ.வை.அ.சிங்கத்தினால் சுட்டிக்காட்டப்படும் தரம் பற்றிய நடைமுறைப் பிரச்சனை அலட்சியப்படுத்தியவாறே ஆகும்.
சய்டம் தொடர்பான பரந்த மக்கள் எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளும் இயக்கங்கள் மத்தியில் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) இயக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வைத்திய பீட நடவடிக்கை குழு முன்னிலையில் உள்ளது. அவர்களின் சய்டம் எதிர்ப்பானது கல்வி உள்ளடங்கலான பொதுமக்கள் நலன் புரிச்சேவைக்கும் எதிரான ஒட்டுமொத்த தாக்குதல்களையும் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து பிரித்து, அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தமளித்து “சய்டம்மை மூடிவிடலாம்” அல்லது “அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்யலாம் என்பதை இலக்காகக் கொண்டதாகும்.
சய்டம் தனியார் மருத்துவ சான்றிதழுக்கு இடம் அழிப்பதனூடாக கல்வியை “வர்த்தக மயமாக்கிவிட்டதாக” பண்டிதர்களைப் போல் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.
தர்போது உள்ள அரசங்கக் கல்வி வர்தக மயமக்கப்படவில்லை மற்றும் முதலாளித்துவ அமைப்பினுள் வர்த்தக மயப்படுத்தாத கல்வி முறையை மேற்கொள்ளலாம் என்பதே இதன் நேரடி அர்த்தமாகும். இது அப்பட்டமான பொய்யாகும். முதலாளித்துவ அமைப்பினுள் அரசாங்கப் பாடசாலை, பல்கலைக்கழகங்கள் என்பன வர்த்தகத்தின் சட்டங்களுக்கு இணங்கவே செயற்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குள் உழைப்பாளிகள் உருவாக்கப்படுவதும், துறைசார் விடயங்கள் திசையமைவுபடுத்தப்பட்டிருப்பதும், உழைப்புச் சந்தையின் தேவைக்கேற்பவே ஆகும்.
அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் இந்த குதர்க்கமான பேச்சு, முதலாளித்துவ அமைப்பினுள் அழமாக வேரூன்றியுள்ள அவர்களது எதிர்ப்பு அரசியலிலிருந்தே ஊற்றெடுக்கின்றது. முதலாளித்துவ அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தமளிப்பதனூடாக தமது சீர்திருத்தவாத கோரிக்கையை வென்றெடுத்துவிடலாம் என்ற பிரமையை பரப்பி, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தின் பால் மாணவர்களின் கவனம் திரும்பிவிடாமல் தடுப்பதே அவர்களது முக்கியமான அரசியல் கைங்காரியமாகும்.
இதன் ஒரு அம்சமாக ஜூலை 21 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சய்டம் நெருக்கடியை தீர்க்கும் முகமாக இரு தீர்மானங்களை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதம் ஒன்றை அனுப்பியது. முதல் தீர்மானம் “சய்டம் பல்கலைக் கழகத்தை முற்றாக மூடிவிடலாம்; இரண்டாவது “அரசாங்கம் பூரணமாக பொறுப்பேற்றுக்கொள்வது, என்பதாகும். நாட்டின் பிள்ளைகளது கல்வி உரிமையை பேணிக் காக்கவும், சுகாதார சேவையில் நடைபெறவுள்ள ”அழிவைத் தடுக்கவும்” ஜனாதிபதி “தக்க நடவடிக்கை எடுக்கும் தலையீட்டை செய்வார்” என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதலை தடுக்க தலையீடு செய்யுமாறு, தாக்குபவரிடமே கோரிக்கை விடுக்கும் இந்த கோழைத்தனமான வஞ்சக செயலினூடாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சிந்தனையில் மென்மேலும் முதலாளித்துவ அரசங்கத்துக்கு நெருக்குவராம் கொடுத்தும் அதற்கு காரணங்களை விளக்கியும் தாக்குதலைத் தடுத்துவிடலாம் என்ற நப்பாசயை வளர்த்து விடுவதே அவர்களது இலக்காகும்.
போலி இடது அமைப்புகள் மற்றும் மத்தியதர வர்க்க குழுக்களுடனும் இனைந்தபடி அ.ப.மா.ஒன்றியம் “மாலபே சயிடம் திருட்டுப் பட்டதாரி கடையை அகற்ற அழுத்தம் கொடுக்கும் ஒருங்கிணைந்த அறிக்கை ஒன்றில் கையொப்பமிடல்” என்பது மற்றுமோர் கபட செயலை முன்னெடுக்கின்றது.
முன்னிலை சோசலிச கட்சியின் கருப்பையான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உருவாக்கியுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி எதிர்ப்பு மையத்தினால், “சயிடம் வேண்டாம்” என்ற தலைப்பில் ஒழுங்கு செய்த கூட்டத்தில் பேசிய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க, “கல்வியுரிமையை அகற்றும்” அரசாங்கத்தின் “கொள்கையை” தோற்கடிப்பதற்கு தமது “அதி கூடிய தலையீட்டை ஒத்துழைப்பை வழங்க சபதம் செய்வதாக” கூறினர். “நட்டத்தில் இயங்கும்” அரச நிறுவனத்தை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சூழ்ந்துகொண்டுள்ள ஜே.வி.பி.யின் இலவச கல்வியை பேணுவது பற்றிய இந்த கருத்து மிகவும் கபடத்தனமான ஒன்றாகும்.
தற்போதைய வலதுசாரி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு தோள் கொடுத்த சிவில் அமைப்புக்களில் பெரும் பாத்திரம் ஆற்றிய நிர்மால் ரஞ்சித் தேவசிறி, மேற்குறிப்பிட்ட கூட்டத்தில் ஓர் முக்கிய பேச்சாளராக இருந்தார். தனியார்மயமாக்கல் உட்பட அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் மக்களின் எதிர்ப்பானது, முழு முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிராக வளர்ந்து விடலாமென்று அச்சத்திலுள்ள, சலுகை படைத்த மத்திய தர வர்க்க தட்டினரின் முக்கிய நபராக பிரதிநிதித்துவம் செய்யும் தேவசிறி, அந்த பொது மக்கள் எதிர்ப்பினை தடம்புரளச் செய்து கரைத்துவிடும் நோக்குடன், “தனியார்மயமாக்கலுக் எதிரான சுலோகத்துக்கு முதலாளித்துவ அமைப்பினுள் ஒரளவு இடமுண்டு என்பதை” நிலைநாட்ட முயன்றார். “நெருக்கடி இருந்தாலும் தற்போது உலகத்தினர் அதனை உணர்ந்து கொண்டு அதற்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதால் இலங்கையும் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்” என்று தேவசிறி உபதேசிக்கிறார். நாடுகள் பூராகவுமுள்ள முதலாளித்துவ வர்க்கங்கள் இந்த நெருக்கடியை “விளங்கிக் கொண்டு” அதற்கு தேவையான சீர்திருத்தங்களை முன்னெடுக்க பாரிய சிக்கன மேற்கொள்வதைப் பற்றி தேவசிறி நன்கறிவார். அவர் கூறியது என்ன வெனில், இலங்கையிலுள்ள ஆளும் வர்க்கமும் இதற்கேற்ப நடக்க வேண்டும் என்பதேயாகும்.
கல்வியை தனியார் மயமாக்கிவிடும் வேலைத்திட்டத்தை எப்படியும் முன்னெடுப்பதற்கே அரசாங்கம் சயிடம் தொடர்பான பல்வேறு உபாய வழிகளை கடைப்பிடிக்க முயல்கிறது. ஆட்சிக்கு வரும் சகல அரசாங்கங்களும் வெளிநாட்டு மூலதனத்தை நாட்டுக்குள் ஊடுருவ செய்து அந்நிய செலாவனியை தக்கவைத்துக்கொள்ள ஏங்கிக்கொண்டுள்ள நிலமைகளுக்கு மத்தியில், அ.ப.க.மா.ஒன்றியம் அதற்கு நிர்ப்பந்தமளித்து செய்யும் தனித்தனியான எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள், இலவசக் கல்வி உரிமையை பேனுவதற்கானது அல்ல. அதற்கு மாறாக முதலளித்துவ அரசாங்கமொன்றை ஆட்சிக்கு கொண்டு வந்து, அதனூடாக வெட்டுத்திட்டங்களை மென்மேலும் முன்னெடுத்து செல்ல வழிவகுப்பதற்கேயாகும்.
இராஜபக்ஷ அரசங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தால் மேலும் ஆழமாக்கப்பட்டு செயற்படுத்தப்படும் கல்வி வெட்டும் தனியார் மயமாக்கலும், 2008ல் ஆரம்பமான பின்னடைவுக்கூடாக நகர்ந்துகொண்டிருக்கும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களது செலவீனத்தால் பேணிக்கப்பதற்கு சர்வதேச மூலதனம் மேற்கொண்டுள்ள அவநம்பிக்கையான முயற்சியின் ஒரு பாகமே ஆகும்.
தாம் போராடிப் பெற்ற குறைந்த பட்ச இலவசக் கல்வியை கூட அபகரிப்பதே தனியார்மயமாக்கலின் நோக்கமாக இருப்பதால், தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த முதலாளித்துவ அரச கல்விமுறையை பேணும் நோக்கில் தனியார் மயமாக்கலை எதிர்க்க முடியாது.
ஆகையினால், கல்வி உள்ளடங்கலான சகல சமூக உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் வென்றெடுக்கவல்ல ஒரே ஒரு வேலைத்திட்டம், முதலாளித்துவ இலாப முறைமையை தூக்கிவீசி, மனித குலத்தின் தேவைக்காக உற்பத்தியை மேற்கொள்ளும் சோசலிச வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் தொழிலாள-விவசாய அரசாங்கம் ஒன்றுக்காக போராடுவதே ஆகும்.
அ.ப.க.மா.ஒன்றிய வைத்திய மாணவ செயற்குழு, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், முன்னிலை சோசலிச கட்சி உட்பட்ட போலி இடது சாரிகளும், தேவசிறி போன்ற வரப்பிரசாதம் படைத்த மத்தியதர வர்க்க தட்டு புத்திஜீவிகளும் இத்தகைய வேலைத் திட்டத்த்தை முழுமையாக எதிர்க்கின்றனர்.