Print Version|Feedback
The International Committee of the Fourth International founds its French section
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தனது பிரெஞ்சுப் பிரிவை ஸ்தாபிக்கிறது
By our reporter
15 November 2016
பாரிஸில் நடந்த ஸ்தாபக மாநாடு ஒன்றில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவாக Parti de l'égalité socialiste ஐ (PES, சோசலிச சமத்துவக் கட்சி) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேசப் பிரதிநிதிகள் அங்கீகரித்தனர்.
PES இன் மாநாடு இரண்டு ஆவணங்களை ஒருமனதாக ஏற்றுக் கொண்டது. முதலாவது, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராய் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்திற்கான ICFI இன் “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற அறிக்கை. இரண்டாவது, உலக சோசலிச வலைத் தளம் இன்று வெளியிடுகின்ற “பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்” என்ற PES இன் ஸ்தாபகம் குறித்த அரசியல் அறிக்கை.
சர்வதேச அளவில் பொருளாதார உருக்குலைவு மற்றும் போருக்கான முனைப்பு தீவிரப்படுதல் ஆகியவற்றாலும், பிரான்சுக்குள்ளாக, சோசலிஸ்ட் கட்சியையும் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து விட்டோடிய பல்வேறு ஓடுகாலிகளின் அரசியல் சந்ததிகளையும் கொண்ட பழைய “இடது” ஸ்தாபகமானது சிதறிப் போய், அதி-வலது கட்சிகள் எழுச்சி காண்பதன் மூலம் குணாம்சப்படுத்தப்படுகின்ற பிரெஞ்சு மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஒரு ஆழமான நெருக்கடியின் மத்தியில் PES இன் புரட்சிகர முன்னோக்குகளை இந்த ஆவணங்கள் முன்வைக்கின்றன.
PES ஸ்தாபக மாநாட்டின் ஆவணங்களை வாசிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் அத்துடன் நாடெங்கிலும் பரவலாக அவற்றை விநியோகம் செய்வதற்கும் WSWS வாசகர்களுக்கும் பிரான்சில் உள்ள ICFI ஆதரவாளர்களுக்கும் PES வேண்டுகோள் விடுக்கிறது. இந்த ஆவணங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ள வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குகளுடன் உடன்படுகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் PES இல் இணைந்து பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படையாக அதனைக் கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என நாங்கள் அழைக்கிறோம்.
PES ஐத் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.