ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Is the US election rigged?

அமெரிக்க தேர்தலில் மோசடி நடந்துள்ளதா?

Barry Grey
18 October 2016

அவரது எதிராளி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் "மோசடி செய்யப்பட்டுள்ளது" என்ற குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் இன் குற்றச்சாட்டுக்களால் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க ஊடகமும் அரசியல் ஸ்தாபகமும் நிரம்பி வழிகின்றன.

ட்ரம்ப் இன் குற்றச்சாட்டுகளில் அதிகரித்தளவில் இனவாத மற்றும் பாசிசவாத தன்மை உள்ளது. குறிப்பாக சிறுபான்மை அண்டைஅயலாரிடையிலான வாக்கு-மோசடி குறித்த கடுமையான கூற்றுகளோடு சேர்ந்து பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களையும் நுழைத்து வருவதற்காக ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதில் சேர்ந்துள்ளது. தேர்தல் நாளன்று வன்முறை சாத்தியக்கூறை உருவாக்கும் விதத்தில், வாக்குப்பதிவுகளைக் "கண்காணிக்க" ஒன்றுதிரளுமாறு ட்ரம்ப் அவர் ஆதரவாளர்களை வலியுறுத்தி வருகிறார்.

எப்போதும் போலவே, ட்ரம்ப் இன் அறிக்கைகள் அரைகுறை உண்மைகள் மற்றும் பொய்களின் ஒரு கலவையாக உள்ளன. ஊடக ஸ்தாபகம் கிளிண்டன் பின்னால் அணிவகுத்துள்ளது என்பதில் எந்த ஐயமும் கிடையாது என்றாலும், தேர்தல் களவாடப்பட்டுள்ளது என்று அறிவிப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு "மோசடி செய்யப்பட்ட தேர்தல்" என்ற வாதத்தை ட்ரம்ப் பயன்படுத்தி வருகிறார். அவர் நவம்பர் 8 க்குப் பின்னர் ஒரு தீவிர வலது, கூடுதல்-இராணுவ துணைப்படை இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு அணிதிரட்டும் குரலாக இந்த "களவாடப்பட்ட தேர்தல்" என்பதை பயன்படுத்துவதற்கு தயாரிப்பு செய்து வருகிறார்.

எவ்வாறிருப்பினும் பொதுவாக இது ஜனநாயகக் கட்சி மற்றும் அரசியல் ஸ்தாபகத்தினது சுய-வலதுசார்ந்த பாசாங்குத்தன விடையிறுப்புக்கு சற்றும் நம்பகத்தன்மையை வழங்கிவிடாது. தூய்மையான ஜனநாயக அமெரிக்க தேர்தல் முறையில் ஏதோ குளறுபடி இருக்கலாம் என்ற எந்தவொரு கருத்தின் மீதும் அவர்கள் கோபம் கொள்வது அர்த்தமற்றதாகும்.

அமெரிக்க ஜனநாயகத்தினூடாக கடந்து வந்த பரந்த பெருந்திரளான மக்களின் கடுமையான அனுபவங்களுடன் ட்ரம்ப் இன் வாதங்கள் தொடர்புபட்டுள்ளதால், ட்ரம்ப் இன் குற்றச்சாட்டுக்கள் ஒப்பீட்டளவில் இனவாத கிளர்ச்சியை சார்ந்த அவரது சிறுபான்மை ஆதரவாளர்களையும் கடந்து ஒலிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நாடே களவாடப்பட்ட ஒரு தேர்தலைக் கொண்டிருக்கும் ஒரு நாடாகும். அமெரிக்க உச்சநீதிமன்றம் புளோரிடாவில் மறுவாக்கு எண்ணிக்கையை நிராகரித்து, 2000 ஆம் ஆண்டு தேர்தலை, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரிடம் (Al Gore) பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வசம் ஒப்படைத்தது.

இதை தொடர்ந்து வந்த 2004 தேர்தலின் போது ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஓஹியோவில் சர்ச்சைக்குரிய வாக்குப்பதிவின் அடிப்படையில் மற்றும் வாக்காளர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற பரந்த குற்றச்சாட்டுக்களுக்கு இடையே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினை வாக்கு-மோசடி என்பதற்கும் அப்பாற்பட்டதாகும். ஏனைய பிரதான முதலாளித்துவ நாடுகளின் தேர்தல் வழிமுறைகளை விட, அமெரிக்காவின் தேர்தல் முறை மிக குறைந்த ஜனநாயகம் கொண்டதாகும். இருகட்சி ஆட்சிமுறை அமைப்புமயப்படுத்தப்பட்டு, முற்றிலும் நிதியியல் பிரபுத்துவத்திற்கு கடமைப்பட்டுள்ள இரண்டு வலதுசாரி கட்சிகளது ஓர் அரசியல் ஏகபோகம் வலியுறுத்தப்படுகிறது—320 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு பரந்த மற்றும் பன்முக நாட்டில் தான் இது நடக்கிறது!

மாநிலத்தின் வாக்குப்பதிவை அணுகுவதற்கான விதிகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளானது, பத்தாயிரக் கணக்கான கையெழுத்துக்களை சேகரித்தல் உட்பட தண்டிக்கும் விதமான தகுதிப்பாடுகளைத் திணிக்கிறது, இது நடைமுறையளவில் "மூன்றாவது கட்சி" மற்றும் சுயாதீன வேட்பாளர்கள் நடப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்வதை சாத்தியமற்றதாக ஆக்குகிறது.

இந்த அரசியல் இருகட்சி ஏகபோகம், அமெரிக்க தேர்தல்களில் தடையின்றி பெருநிறுவன பணம் பாய்வதையும், ஒட்டுமொத்த நிகழ்முறையில் ஒரு விதத்தில் ஊழல்மிகுவதையும், வேறெந்த பிரதான தொழில்மயப்பட்ட நாட்டுடன் பொருந்தவியலாத ஒரு திமிர்தனத்தையும் கூடுதலாக பலப்படுத்திவிடுகிறது. இந்தாண்டு ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பிரச்சார செலவு ஒரு புதிய சாதனையாக 7.3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது. சகல நடைமுறை நோக்கங்களுக்காக, அமெரிக்காவில் உயர் பதவியை வெல்ல வேண்டுமானால் ஒருவர் ஒன்று பில்லியனர்களது ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவரே கோடீஸ்வரராக இருக்க வேண்டும்.

பெருநிறுவனத்திற்கு சொந்தமான ஊடங்கள், இரண்டில் ஒரு கட்சியைக் குறித்த செய்திகளை கவர்ச்சிகரமாக வெளியிட்டு அதன் ஜனநாயக-விரோத பங்கைச் செய்கின்றன. இத்தேர்தலில், Libertarian கட்சியின் கேரி ஜோன்சன் மற்றும் பசுமை கட்சியின் ஜில் ஸ்டெய்ன், இவர்கள் கருத்துக்கணிப்புகளில் முறையே தேசியளவில் 7 சதவீதம் மற்றும் 3 சதவீத வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களது தொலைக்காட்சி விவாதங்களில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளனர், இவ்வாறாயின் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜெர்ரி வைட் குறித்து குறிப்பிட வேண்டியதே இல்லை.

இதன் விளைவு, அதிகரித்தளவில் இயங்கவியலாத நிலையில் உள்ள ஓர் அரசியல் அமைப்புமுறையாகும், ஏனென்றால் அதனால் பாரிய பெரும்பான்மை மக்களின் எந்தவொரு குறைகளையும் பூர்த்தி செய்யவியலாது. வாக்காளர்களில் அரிதாக வெறும் பாதி பேர் தான் வாக்களிக்க விரும்புகிறார்கள் என்ற உண்மை, அமெரிக்க தேர்தல் அமைப்புமுறை மீதான ஒரு கேவலமான விமர்சனமாக உள்ளது.

புஷ் மீதான மக்கள் வெறுப்பலை மற்றும் உழைக்கும் மக்கள் வாழ்க்கை நிலைமைகள் மீதான அவரது தாக்குதல்கள் மற்றும் போர்கள் மீதான மனக்குமுறல்களில் இருந்து பதவிக்குக் கொண்டு வரப்பட்ட ஒபாமா நிர்வாகத்துடனான கசப்பான அனுபவத்தால், அரசாங்கம் பின்பற்றும் கொள்கைகளில் தங்களின் தேவைகள் மற்றும் கவலைகளோ அல்லது தங்களின் வாக்குகளோ எந்த தாக்கமும் கொண்டிருக்க போவதில்லை என்று பத்து மில்லியன் கணக்கான மக்கள் அதிகளவில் நம்புகின்றனர். அவரது வம்சாவளியின் காரணமாக முற்போக்கான மாற்றத்திற்கான ஒரு நபராக இருப்பாரென தவறுதலாக நம்பப்பட்ட “நம்பிக்கை" மற்றும் "மாற்றத்திற்கான" அந்த வேட்பாளர், அவருக்கு முன்பிருந்தவரின் போர் கொள்கைகள் மற்றும் பெருநிறுவன சூறையாடலையே தொடர்ந்து ஆழப்படுத்தினார்.

இரண்டு கட்சிகளது தலைமையில் நடந்து வரும் இப்போதைய தேர்தலில், தசாப்தகால பொருளாதார சீரழிவு மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் விளைவுகள் மேற்புறத்திற்கு வந்துள்ளன, அது இருகட்சி ஆட்சிமுறை பிழைத்திருப்பதன் மீதே கேள்விக்குறியை நிறுத்துகிறது. ஒரு சோசலிஸ்ட் என்றும் வோல் ஸ்ட்ரீட் க்கு எதிர்ப்பாளர் என்றும் பொய்யாக கூறிய ஒரு வேட்பாளரான பேர்னி சாண்டர்ஸூக்கு மில்லியன் கணக்கானவர்கள் வாக்குகள் வழங்கிய ஒரு தேர்தல் சுழல்முறை, இப்போது ஒரு பில்லியனிய அரைவாசி-பாசிசவாதிக்கும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ/உளவுத்துறை ஸ்தாபகத்தின் ஊழல்மிகுந்த ஒரு தலையாட்டிக்கும் இடையே ஒருவரைத் "தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை" இப்போது மக்கள் முன்வைக்கிறது என்ற உண்மையே அந்த அமைப்புமுறையின் திவால்நிலைக்கு ஒரு அளவீடாகும்.

விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட கோல்ட்மென் சாக்ஸ் உடனான ஹிலாரி கிளிண்டன் உரையின் எழுத்துப்பிரதிகள், அரசியல்வாதிகளுக்கும் வோல் ஸ்ட்ரீட்டுக்கும் இடையே நிலவும் நிஜமான உறவை எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் நாட்டை நடத்துவதற்கு நிதியியல் பிரபுத்துவத்தின் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்ட வேலையாட்களாக இருக்கிறார்கள்.

இரண்டு வேட்பாளர்களின் வெகுஜனவாத கூற்றுகளுக்கும் மற்றும் அவர்கள் நடைமுறைப்படுத்த விரும்பும் வேலைத்திட்டத்தின் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள முற்றிலும் தொடர்பற்றத்தன்மையே, இத்தேர்தலில் மேலாளுமை கொண்டுள்ள அடிப்படையான மற்றும் மிக பிரமாண்டமான மோசடியாகும். நவம்பரில் யார் ஜெயித்தாலும், போர், சிக்கனத் திட்டம் மற்றும் ஒடுக்குமுறை என்பதே நிஜமான திட்டநிரலாக இருக்கும்.

தேர்தல் மோசடி நடந்துள்ளதா? நிச்சயமாக நடந்துள்ளதுதான்—ஆளும் வர்க்கத்திற்கு ஏற்புடைய ஒரு முடிவை உருவாக்குவதற்காக நடந்துள்ளது. ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையும் மோசடியாக உள்ளது மற்றும் அடிப்படையிலேயே ஜனநாயக விரோதமாக உள்ளது ஏனென்றால் முதலாளித்துவம் என்பது வர்க்க சுரண்டலுக்கான ஒரு அமைப்புமுறையாகும் அதில் நிஜமான அரசியல் அதிகாரம் ஒரு பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்தின் கரங்களிலேயே குவிந்திருக்கும்.