Print Version|Feedback
Fourth IYSSE election meeting at Berlin’s Humboldt University
The struggle against war and the lessons of history
பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் IYSSE இன் நான்காவது தேர்தல் கூட்டம்
போருக்கு எதிரான போராட்டமும் வரலாற்றின் படிப்பினையும்
By our correspondent
16 January 2016
கடந்த புதன் கிழமை அன்று சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) குழு பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் இன்னொரு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர். மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்காக நடைபெறும் பிரச்சாரத்தில் IYSSE ஆல் நடைபெறும் நான்காவது கூட்டம் இதுவாகும்.
முந்தைய கூட்டங்கள் பேராசிரியர்கள் Herfried Münkler மற்றும் Jörg Baberowski ஆகியோரின் பாத்திரம் பற்றியும் பொலீஸ் அரசு மற்றும் போருக்கு அவர்களின் ஆதரவு பற்றியும் விவாதித்திருந்தது. புதன்கிழமை கூட்டத்தின் கருத்தானது “போருக்கு எதிரான சோசலிச இயக்கத்தின் வரலாற்றுப் போராட்டம்” பற்றியதாக இருந்தது.
IYSSE ஆனது Partei für Soziale Gleichheit (சோசலிச சமத்துவ கட்சி- PSG) இன் தலைவர் உல்றிச் றிப்பேர்ட் ஐ பேச அழைத்தது. “இன்று இரவு நாம் கலந்துரையாட இருக்கும் வரலாற்றின் படிப்பினைகள், முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் கொண்டிருக்கின்றது” என்ற வார்த்தைகளுடன் அவர் பேச்சை தொடங்கினார். அரசியல் நிலைமைகளில் திடீர் மாற்றத்தை நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இராணுவவாதத்திற்கும் போருக்கும் திரும்புதல், ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) சிரியா, மாலி, மீண்டும் ஆப்கானிஸ்தானில் யுத்தங்களில் பங்கேற்றல் பெரும் சக்தியுடனும் வேகத்துடனும் முன்னே கொண்டுசெல்லப்பட்டு வருகின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது உலக யுத்தத்தின் நிகழ்வின்போதான, இரண்டாவது உலக யுத்தத்தின் தொடக்க நிகழ்வின்போது போல, இது தடையில்லாத பிரச்சார முன்னெடுப்போடு தொடர்பு கொண்டதாக இருக்கிறது.
கொலோனில் புத்தாண்டு நிகழ்வின்போதான சம்பவங்களை எப்படி ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் அதனை மிகைப்படுத்தி புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறித்தன மற்றும் இனவெறிப் பிரச்சாரத்தை தூண்டிவிட எப்படி பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை ரிப்பேர்ட் பின் விளக்கினார். மூன்றாவது ரைக் நொருங்கி எழுபதாண்டுகள் ஆன பின்னரும் இனவெறித் தப்பெண்ணங்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டு மற்றும் வெட்கங்கெட்டதனமாய் கறுப்புத்தோல் “மனிதவிலங்குகள்” ஜேர்மன் பெண்களை கைக்குள் அகப்படுத்திக் கொள்கிறார்கள் என்று வெட்கங்கெட்ட உருவங்களைப் பயன்படுத்திகின்றனர் என்றும் கூறினார், காட்டப்பட்ட மூன்று இன்றைய கேலிச்சித்திர படங்களும் நாஜிக்களுடையதோடு கொண்ட ஒப்புமையை விளக்குகின்றன.
இது மக்கட்தொகையில் உள்ள பொதுவான மனநிலை அல்ல, இன்னும் சொல்லப்போனால் அது மேலிருந்து, ஆளும் தட்டிலிருந்து இலக்குவைக்கப்பட்ட பிரச்சாரத்தின் விளைவாகும் என்று வலியுறுத்திக் கூறினார். அது யுத்தத்தை நோக்கிய அபிவிருத்தியோடு நேரடித்தொடர்பில் இருக்கிறது மற்றும் அது பல குறிக்கோள்களை பினபற்றுகிறது என்று ரிப்பேர்ட் கூறினார். அது மிகப் பிற்போக்கான அரசியல் சக்திகளை அணிதிரட்டவும் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் யுத்தங்களில் ஜேர்மன் பங்கேற்பதை சட்டபூர்வமாக்குவதற்கும் சேவைசெய்கிறது. நிறைய போலீஸ், இரகசிய உளவு முகவாண்மைகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு அழைப்புவிடுப்பது ஒரு போலீஸ் அரசை ஸ்தாபிப்பதற்கான நோக்கங்கொண்டது என்றார்.
அவரது பங்களிப்பின்போது பல தடவைகள் ரிப்பேர்ட் இந்தப் பிரச்சினைக்கு வந்தார். “ஊடகத்தில் வரும் இனவெறிப்பிரச்சாரம் மற்றும் அதிக போலீஸ் மற்றும் துருப்புக்களுக்கான அழைப்புக்கள் ஆகியன என்ன இங்கே வரப்போகிறது என்பதன் முன்கூட்டிய அனுபவ உணர்வாகும்,” என்று அவர் விளக்கினார். பின்னர் அவர் முதலாவது உலக யுத்தத்தின் ஆரம்பத்தில் நடந்த இனவாத பிரச்சாரம் பற்றி விளக்கினார், அந்தநேரம் அது ”ரஷ்ய மனிதமிருகங்களுக்கு” எதிராக இயக்கப்பட்டது.
அவர் முதலாம் உலக யுத்தத்திலிருந்து பிரச்சார வெளியீட்டிலிருந்து, ”ரஷ்யர்களை குடிகாரர்கள், மிருகங்கள், ஊமைகள் மற்றும் ஏடாகூடமானவர்கள், நயமற்ற மூக்கினர், பெரும்பாலும் மென்மயிர்த்தோல் தொப்பிகளை வைத்துக்கொண்டு வோட்கா புட்டியுடன் திரிபவர்கள்” என முன்வைக்கப்படிருந்தது. அந்த காலத்து ஒரு பிரபல வரலாற்று புத்தகத்தில் பினவருமாறு காணக்கிடைக்கும்: அறிவொளி கதிர்கள் அல்லது நாகரிக கதிர்கள் அடிமைகளின் மண்குடிசைகளுக்குள் ஒருபோதும் ஊடுருவமுடியாது; அவன் பச்சை உணர்ச்சி சந்தோஷங்களுக்காக வாழ்கிறான், சிறப்பாக மதுவிலிருந்து கிடைக்கும் சந்தோஷங்களுக்காக, அதன்விளைவாக மந்தமாக இருக்கிறான்; அவனது மிருகத்தனமான இருப்பில் நிலச்சுவாந்தார்களால் திகிலூட்டப்பட்டிருக்கிறான்….”
ஒரு “நாகரிமடைந்த நாடு” என்ற வகையில், ஜேர்மனி “அறிவொளியின் மதிப்புக்கள்”, “ஜேர்மன் கலாச்சாரம் மற்றும் நாகரிகம்” மற்றும் “ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புக்கள்” ஆகியவற்றைப் பாதுகாக்கும் பணியைக் கொண்டிருந்தது என்று பெரும்பாலும் இன்றுபோலவே, அந்த வேளையில் வலியுறுத்தல் செய்யப்பட்டது. இந்த வலுவான கருத்தியல் அழுத்தத்தின் கீழ், ஏற்கனவே பலமான தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத போக்குகள் வளர்ந்திருந்த, சமூக ஜனநாயகக் கட்சி நிலைகுலைந்தது. 1914 ஆகஸ்ட் 4ல் சமூக ஜனநாயக கட்சியானது பாராளுமன்றத்தில் கெய்சரின் யுத்த கடன்களுக்கு உடன்பட்டு, யுத்தத்தை ஆதரித்தது.
ரிப்பேர்ட் ஜேர்மன் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைக் காப்பதற்கான போராட்டம்”, யுத்தத்தின் முதல் மாதத்தில் ஜேர்மன் துருப்புக்களால் பெல்ஜிய நகரம் Leuven அழிக்கப்பட்டது பற்றிய குறிப்புக்களுடன் அப்பொழுது எப்படி இருந்தது என்று ரிப்பேர்ட் விளக்கினார். ஏனையவற்றுக்கு மத்தியில், உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழக நூலகம் மதிப்படப்படமுடியாத தொடக்ககால படைப்புக்களுடன் சேர்த்து அழிக்கப்பட்டது.
பின்னர் அவர், “நாகரிகமடைந்த உலகிற்கு அழைப்பு” என்பதை மேற்கோள்காட்டினார், அதில் ஹம்போல்ட் பல்கலைக்கழகம்போல Friedrich-Wilhelms-Universität பேராசிரியர்கள் பலர் அங்கே அழைக்கப்பட்டு, வேலை செய்திருந்தனர். அது பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு முடிகிறது: “ஜேர்மன் இராணுவவாதம் இல்லையென்றால், ஜேர்மன் கலாச்சாரம் பூமியிலிருந்து துடைத்தழிக்கப்பட்டு நீண்டகாலம் ஆகியிருக்கும்….. Deutsches Heer-ம் (ஜேர்மன் இராணுவம்) ஜேர்மன் மக்களும் ஒன்றுதான்.”
ரிப்பேர்ட் தொடர்ந்தார்: “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் Bundeswehr சமுதாயத்தின் பிரதான நீரோட்டத்தில் இருப்பது தேவையாகிறது என்று வலியுறுத்தும் ஜனாதிபதி Joachim Gauck-ன் எதிரொலி உங்களுக்கு கேட்கிறதா? ஜேர்மன் இராணுவத்திற்கு அதிக மரியாதையும் அதிக அங்கீகாரமும் கட்டாயம் அளிக்க வேண்டும்.”
அவரது பேச்சின் முடிவில், ரிப்பேர்ட் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முக்கியத்துவம் பற்றி பேசினார். “சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும்” இது 2014 கோடையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது கூறுவதாவது:
“20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களும் உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிப் போன தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளில் இருந்தே எழுந்திருந்தன. கடந்த மூன்று தசாப்த காலங்களின் உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது, உலகப் பொருளாதாரம் ஒருங்கிணைவு காண்பதில் மேலுமொரு பண்புரீதியான பாய்ச்சலை விளைவித்ததுடன், முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை தீவிரத்தின் புதியதொரு உச்சத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.... போருக்கு எதிரானதொரு போராட்டமில்லாமல் சோசலிசத்திற்கான எந்தப் போராட்டமும் இருக்க முடியாது, சோசலிசத்துக்கான போராட்டமில்லாமல் போருக்கு எதிரான எந்தப் போராட்டமும் இருக்க முடியாது.
முடிவுரையில், ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில் IYSSE பல்கலைக்கழக குழு பேச்சாளர் Sven Wurm கூட்டத்தில் பேசினார். அவர் வெளிநாட்டவருக்கு எதிரான பிரச்சாரத்தின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். வெளிநாட்டவர் என்ற வார்த்தை ஊடகங்களில் தற்போது பெரும்பாலும் “குற்றகரமானவர்” என்பதோடு இணைத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். கூட்டத்திற்கு சற்று முன்னர் Wurm, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் பொதுச்செயலர் Peter Tauber பாராளுமன்றத்தில் பேசியதை சுட்டிக்காட்டினார். அதில் அவர் ஒவ்வொருநாளும் ஆயிரம் வெளிநாட்டவர் அவரவர் நாட்டிற்கு திருப்பிஅனுப்பப்படவேண்டும் என்று கோரினார்.
கடந்த ஆண்டு, அடைக்கலம் பெறமுடியாமற் போனவர்கள் சுமார்18,000 பேர் அவ்வந்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்று Wurm கூறினார். Tauber இன் கோரிக்கை இதனை 20 முறை அதிகமாகச் செய்யவேண்டும் என்பதாகும். “இதனை பெருந்திரளாக நாடுகடத்தல்” என்று மட்டுமே விவரிக்க முடியும், என்றார் அவர். “பின்னர் அவர்கள், கடூழிய சிறைமுகாம்களுக்கு யூதர்களை அனுப்பிய கால்நடைகள் டிரக்குகளை திரும்பக் கொண்டு வரலாம்” என ஏளனமாய் குறிப்பிட்டார்.
சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை நிறுவுதல் என்பது வரலாற்றை பொய்மைப்படுத்துதலுக்கு எதிரான அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளது, எமது பல்கலைக்கழகத்தில் “வரலாற்றைப் பொய்ம்மைப்படுத்தலானது Herfried Münkler மற்றும் Jörg Baberowski ஆகியோரால் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.” இதனால்தான் IYSSE ஐக் கட்டி எழுப்பலும் மாணவர் பாராளுமன்றத்திற்கு அதனைத் தேர்ந்தெடுத்தலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று Wurm வலியுறுத்தினார்.
இரண்டு பங்களிப்புக்களை தொடர்ந்து, நேரடி விவாதம் வளர்ச்சிபெற்றது. யுத்தத்திற்கு எதிரான அமைதிவாத எதிர்ப்புக்கும் சோசலிச எதிர்ப்புக்கும் இடையிலான வேறுபாடு பற்றி நீண்ட விவாதம் அங்கு நடைபெற்றது.
இரு பேச்சுக்களுமே அமைதிவாத பிரச்சினை பற்றி அலசின. ஏகாதிபத்திய போருக்கும் விடுதலைப்போருக்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்கும், மற்றும் ஏகாதிபத்திய போரின் காரணம் சமுதாயத்தின் புறநிலை முரண்பாடுகளில் கிடக்கின்றது என புரிந்து கொண்டிருக்கும் மார்க்சிஸ்டுகளை போல அல்லாமல், அமைதிவாதிகள் வன்முறையையும் போரையும் முற்றிலும் அக நிலைப்பாட்டிலிருந்து பார்க்கின்றனர். பகுத்தறிவு, மனிதநேயம் ஆகியவற்றிற்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் அமைதிவாதிகள் அனைத்து அமைதி விரும்பும் மக்களையும் ஒன்றிணைக்க முயல்கின்றனர். இது தோல்விக்கே இட்டடுச்செல்லும், இதன் விளைவாக, போரின் பொழுது அமைதிவாதிகள் எப்பொழுதும் இராணுவவாதிகளின் பக்கம் சார்பு எடுப்பார்கள்.
அமைதிவாதிகள் இராணுவவாதிகளாக உருமாற்றமடைதற்கு பசுமைக் கட்சியே ஒரு நல்ல எடுத்துக்காட்டு என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. “அவர்கள் 1980களின் அமைதிவாத இயக்கத்தில் இருந்து தோன்றினார்கள் மற்றும் இன்று Bundeswehr ஐ என்றுமிராத புதிய மற்றும் என்றுமிராத அதிக ஒருங்கிணைந்த போரிடும் பணிகளுக்கு அனுப்புவதற்கு கடினமாய் காத்துக்கிடப்பதைக் காணமுடியும். வண்ணப் பச்சை முன்பெலாம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நின்றது. இன்று அது சீருடைப் பணிக்காக நிற்கிறது” என்று ஒரு பங்கேற்பாளர் குறிப்பிட்டார்.
போருக்கு எதிரான போராட்டத்தில் சோசலிச முன்னோக்கு பற்றி பல வினாக்களுக்கு சுருக்கமாகவே பதில்கூற முடிந்தது. இந்த பிரச்சினைகள் மீதான கலந்துரையாடல் எதிர்கால கூட்டங்களிலும் தொடரும்.
பல மாணவர்கள் தங்கள் சகமாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியிலான அடுத்த கூட்டத்தை விளம்பரப்படுத்தவும் IYSSE ஐ தேர்ந்து எடுப்பதை முன்னேற்றுவதற்கும் துண்டறிக்கைகளையும் சுவரொட்டிகளையும் தம்முடன் எடுத்துச் சென்றார்கள். IYSSEன் சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் இறுதி தேர்தல் கூட்டம் ஜனவரி 18 திங்கள் அன்று மாலை 6;30 மணிக்கு பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் (2002 அரங்கில்) நடைபெறும்.
மாணவர் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் ஜனவரி 19 மற்றும் 20 ல் நடக்கவிருக்கின்றன.