Print Version|Feedback
German IYSSE wins four seats in Humboldt University Student Elections
ஜேர்மன் IYSSE ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர் தேர்தல்களில் நான்கு ஆசனங்களை வென்றது
By our correspondent
21 January 2016
பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வியாழனன்று காலை வெளியிடப்பட்ட ஆரம்ப தேர்தல் முடிவுகளின்படி, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு 149 வாக்குகளைப் பெற்று, மாணவர் நாடாளுமன்றத்தில் நான்கு ஆசனங்களைப் பெற உள்ளது.
இந்த முடிவுகள் ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர்களிடையே IYSSE க்கான ஆதரவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. IYSSE, ஜனவரி 2015 தேர்தல்களில், 1.83 சதவீத வாக்குகள் பெற்று ஓர் ஆசனத்தைக் கொண்டிருந்தது. ஜனவரி 19-20 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த இந்தாண்டின் வாக்கெடுப்பில், IYSSE இன் ஆதரவு 6.04 சதவீதமாக உயர்ந்தது.
தேர்தலில் பங்குபற்றிய 17 மாணவர் குழுக்களில் பத்து, வாக்குகளை இழந்தன.
சுதந்திர மாணவர்கள் (287 வாக்குகள், 7 ஆசனங்கள்), ஹம்போல்ட் இன் இடது வேட்பாளர்கள் -Left List at Humboldt– LiLi (256 வாக்குகள், 6 ஆசனங்கள்) மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் இளைஞர் அமைப்பான –Social Democratic Party's youth organization Jusos– (253 வாக்குகள், 6 ஆசனங்கள்) என அதிகபட்ச வேட்பாளர்களைப் பெற்றுள்ளன. அரசியல்ரீதியில் கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணிக்கு (CDU) அண்மித்து நிற்கும் கிறிஸ்துவ ஜனநாயக மாணவர்கள் (The Association of Christian Democratic Students -RCDS) அமைப்பு 150 வாக்குகளைப் பெற்றது. இடது கட்சியின் மாணவர் அமைப்பான Die Linke.SDS145 வாக்குகளைப் பெற்றது.
ஜேர்மன் இராணுவவாதத்தின் புத்துயிரூட்டல் மற்றும் அதற்கு ஹம்போல்ட் பல்கலைக்கழக்கத்தில் வலதுசாரி கல்வியாளர்களது சித்தாந்தரீதியிலான நியாயப்பாடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தை IYSSE அதன் பிரச்சாரத்தின் மையத்தில் நிறுத்தியிருந்தது. அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச ஏகாதிபத்திய-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அழைப்புவிடுத்தது. சிரியா மற்றும் மாலியில் ஜேர்மன் ஆயுத படைகளின் (Bundeswehr) புதிய இராணுவ தலையீடுகள் மற்றும் ஊடகங்களில் ஓர் ஆக்ரோஷமான புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்பு பிரச்சாரம் ஆகியவற்றிற்கு இடையே IYSSE இன் கொள்கைகள் ஒரு பலமான விடையிறுப்பைக் கண்டுள்ளன.