அவசரகாலநிலை மீதாக பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியில் பகிரங்க
பிளவு
By Alex Lantier
29 February 2016
Print
version | Send
feedback
ஐரோப்பாவில் பதட்டங்கள் அதிகரித்துவரும் நிலையிலும்,
அவசரகாலநிலையின் கீழ் வெகுஜனங்களின் கோபத்தின் மத்தியில் கடுமையான சிக்கன
பொருளாதார கொள்கைகளை பாரிஸ் திணித்து வருவதானது, ஆளும் சோசலிஸ்ட்
கட்சிக்குள் குழுவாத யுத்தங்களை வெடிக்கச் செய்துள்ளது. கடந்த வியாழன்
அன்று, லீல் மேயரும் 2012 ஜனாதிபதி தேர்தலில் நம்பிக்கையுடன் இருந்தவருமான
மார்ட்டின் ஓப்ரி லு மொண்ட் பத்திரிகையில் முழுபக்க கருத்துரையை
வெளியிட்டிருந்தார், அதில் பல சோசலிஸ்ட் கட்சி (PS) சட்ட சட்டமன்ற
உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டிருந்தனர், அத்தோடு ஜேர்மனிய பசுமைக்
கட்சியின் டானியல் கோன்-பென்டிட்டும் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டின்
கொள்கைகளை விமர்சித்திருந்தார்.
ஓப்ரி PS இன் பிற்போக்கு கொள்கைகளின் பொது
நிலைப்பாட்டுக்கு அவரது ஆதரவை சமிக்கை செய்தார். நேட்டோவால் நடத்தப்பட்ட
யுத்தங்கள் பற்றி மௌனமாக இருந்ததோடு, “அவசரகாலநிலையை
அங்கீகரிப்பதாக” தெரிவித்தார், மற்றும் சமூக, தொழிலாளர்
விஷயங்களில் “பெரும் சீர்திருத்தங்களை” PS கட்டாயம்
அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். இன்னும் சொல்லப்போனால், ஒரு
தந்திரோபாய மாற்றத்திற்கு அழைப்பு விடுத்து, “தயாரிக்கப்பட்டுக்
கொண்டிருப்பது பிரான்ஸ் பலவீனம் அடைவதை நீடித்தல்” என்று
தலைப்பிட்ப்பட்டிருந்த அவ்வம்மையாரின் கட்டுரையில், ஹோலண்டின் கொள்கைகள்
பிரான்ஸ்க்கும் PS க்கும் அடிப்படை அச்சுறுத்தலை முன்வைப்பதாக தாக்கினார்.
“அச்சுறுத்துவது என்னவெனில் வெறுமனே தற்போதைய
ஜனாதிபதி பதவிக்காலத்தின் தோல்வி என்பது இனியும் இல்லை, மாறாக பிரான்சின்
மற்றும் மிக வெளிப்படையாக இடது பலவீனமடைவது நீடித்துக்கொண்டிருப்பதுதான்,
நாம் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் திருகுப்புரிசுருள்
வடிவிலான கீழநோக்கிய இறக்கத்தை தடுத்து நிறுத்தவில்லையானால்” என
எழுதினார். அவ்வம்மையார் ஹோலண்டின் திட்டமிடப்பட்ட தொழிலாளர் விதி
சீர்திருத்தத்தை விமர்சித்தார், பல்வேறு குற்றங்கள்
நிரூபிக்கப்பட்டவர்களின் பிரெஞ்சு பிரஜாஉரிமை எனும் நிலையை
பறித்தெடுப்பதற்கான அவரின் முன்மொழிவு மற்றும் அண்மையில் மூனிச்சில் நடந்த
பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் அகதிகள் கொள்கை பற்றிய பிரதம மந்திரி
மானுவல் வால்ஸின் விமர்சனம் ஆகியவற்றை அவ்வம்மையார் விமர்சித்தார். அங்கு
வால்ஸ் மேலும் ஒடுக்குகின்ற அகதிகள் கொள்கைக்காகவும் மாஸ்கோவுடன்
நட்புறவுக்காகவும் அழைப்பு விடுத்தார்.
ஓப்ரியின் விமர்சனங்கள் - அவசரகாலநிலை தொடர்பாகவும்,
தொழிற்சங்கங்களோடு ஒப்பந்தங்களில் பெரும்மாறுதல்களை பேச்சவார்த்தை
செய்யவும், பரந்த அளவில் தொழிலாளர்களை வெளியேற்றலை துரிதப்படுத்தவும்
நிறுவனங்களை அனுமதிக்கும் தொழிலாளர் விதியில் சீர்திருத்தம் தொடர்பாகவும்,
இளைஞர்கள் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் பெருகியுள்ள நிலையில், PS
அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கீழிறங்கியது.
பொருளாதார அமைச்சர் இமானுவல் மக்றோன், தொழிலாளர் விதியின்
சில அம்சங்களை தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொடர்ந்து பேச்சுவார்த்தை
நடத்துவதற்கு வாக்குறுதி அளித்தார்: “ஒவ்வொன்றையும் வெறுமனே
கொடூரமானதாக்க முடியாத ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஒரு புள்ளியில்
இருக்கிறோம், ஏனென்றால் அந்த ஆபத்து தேர்வு அனைத்து பிரச்சினைகளையும்
தீர்க்காமலேயே நீண்டகால விவாதத்தில் முடியும்.”
ஆயினும், தொழிலாளர் விதியில் என்னென்ன சிறு மாறுதல்களை
தொழிற்சங்கங்கள் செய்தபோதிலும் ஓப்ரியின் கடிதத்தின் முக்கியத்துவம்
அதுவல்ல, அவர்கள் தங்களது உடன்பாட்டை ஏற்கனவே சமிக்கை காட்டிவிட்டனர்.
இன்னும் சொல்லப்போனால், அவ்வம்மையாரின் கடிதம், ஐரோப்பாவின் உள்ளே
புவிசார்-மூலோபாய பிரிவுகள் உக்கிரமடைந்து வருவதை சுட்டிக் காட்டுகின்றது,
குறிப்பாக ஓப்ரியின் அச்சம் ஹோலண்ட் சோசலிஸ்ட் கட்சியை
துண்டுதுண்டாக்கிவிடுவார் என்பதே, 1968 பொதுவேலைநிறுத்தத்திற்கு பின்னர்
விரைவிலேயே சோசலிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதில் இருந்து அது பிரான்சின்
பிரதான ஆளும் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது.
பேர்லினுக்கு எதிரான வால்சின் தாக்குதல், அகதிகள்
விவகாரத்தில் ஜேர்மனியை இலக்காக கொண்ட, பிரான்கோ-ரஷ்யன் அச்சினைப் பற்றிய
வெளிப்படையான அவரது கருத்துப்பாடு, முதலாம் உலக யுத்தத்திற்கு
இட்டுச்சென்றதில் ஐரோப்பாவில் வளர்ச்சி அடைந்த கூட்டை எதிரொலிக்கிறது, ஒரு
பாரிய தவறாகும் என்று சொன்ன பல கருத்துரையளர்களுடன் ஓப்ரி
இணைந்துகொண்டார். முன்னாள் லு மொண்ட் ஆசிரியர் Natalie
Nougayrède மாநாட்டிற்கு பின்னர் உடனே The Guardian இல்
எழுதுகையில், இந்த இரங்கத்தக்க விஷயத்தில் பின்வருமாறு அறிவித்தார்:
“பாரிஸ், பேர்லினோடு உறவை மீளக் கட்டி அமைக்க –
விரைந்து நன்றாக செயல்பட வேண்டும். மேர்க்கெல் அமைதியாய் இருக்கிறார்,
ஆனால் சேதம் உண்மை இல்லை என்று நினைக்க வேண்டாம்”.
ஓப்ரி இந்தக் குறிப்புக்களை எதிரொலிக்குமாறு அறிவித்தார்,
“கடந்த வாரம், மூனிச்சில் அகதிகள் பற்றி நாகரீகமற்ற பேச்சால்
அங்கு சுமத்தியுள்ள காயம் இருந்தது. சுதந்திரத்திற்கான குரலில்
உரிமைகோருவது எல்லாவற்றுக்கும் குற்றப்பொறுப்பை குறைத்துக்காட்டிவிட
முடியாது. இல்லை, திருவாளர் பிரதமரே, அங்கேலா மேர்க்கெல் ஒன்றும் அப்பாவி
அல்ல…… பிரான்சின் பணி சுவர்களை எழுப்புவதல்ல
பாலங்களைக் கட்டுவதாகும்.”
ஆயினும், ஓப்ரியின் கருத்துக்களில் பெருமளவு, ஹோலண்ட்
ஐரோப்பிய சமூக ஜனநாயகத்திற்கு, குறிப்பாக PS க்கு சரிசெய்துவிடமுடியாத
பாதிப்பை செய்துவிடமுடியும் என்ற அச்சத்தைப் பற்றி பேசுகின்றன. நீடிக்கும்
அவசரகாலநிலைமையில் தங்கி இருந்து கொண்டு, நவபாசிச உணர்வுக்கு
வேண்டுகோள்விடுப்பது, மற்றும் சிக்கன பொருளாதாரக் கொள்கைகளை திணிப்பது
இவற்றின் மூலம், PS ஆனது சோசலிசத்தைக் கொண்டு ஏதாவது செய்யும் என்று
எழுப்பும் அதன் கூற்றானது அப்பட்டமான மோசடி என உழைக்கும் மக்களின் முன்னே
உயர்த்தும்.
பிரஜாஉரிமை பறிப்பது பற்றிய கொள்கையின் நிலைச்சான்றை
குறிப்பிடாமல் –ஐரோப்பாவில் மரண முகாம்களுக்கு அனுப்பப்படும்
முன்னர், விச்சியில் இருந்த பிரெஞ்சு பாசிச அதிகாரிகள் இரண்டாம் உலக
யுத்தத்தின்பொழுது ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சில் யூதர்களுக்கு எதிராக
பயன்படுத்திய கொள்கை– ஹோலண்ட் அதனை புதுப்பிப்பதாக ஓப்ரி
விமர்சித்தார். அவர், PS இன் ஒரு பகுதி, இன்னும் வெளிப்படையாக அதன்
பாராளுமன்ற கூட்டின் ஒரு பகுதியினர், மற்றும் வெளிப்படையாகவே வலதுசாரியாய்
இருக்கும் கட்சிகள் கூட அந்த கொள்கையை ஏற்கும் அரசியற் சட்ட திருத்த
முன்மொழிவை ஆதரிக்கும் என தான் நினைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அவர் எழுதினார், “தீய நோக்கங்களை எதிர்கால
அரசாங்கங்களின் கைகளில் வைப்பது, எல்லாவகையான துஷ்பிரயோகங்களுக்கும்
கதவைத் திறக்கிறது. இந்த நிலைமைகளின் கீழ் வேர்சாயில் காங்கிரசுக்கு
செல்வது இடதினை நொருக்கிவிடும், ஜனநாயக முகாமைக்கூட நொருக்கிவிடும். இதை
நாம் தவிர்ப்போம். பிரஜாஉரிமையை பறித்தெடுப்பதற்கு பதில், சட்டத்தால்
விளங்கப்படுத்தப்பட்டபடி, அவர்களது மூலம் என்னவாக இருந்தாலும், எல்லாப்
பயக்ங்கரவாதிகளுக்கும் பொருந்தக்கூடிய, குடியுரிமையை பறித்தெடுக்கும்
தண்டனையை அல்லது தேசிய தரம் இழத்தல் தண்டனையை பதிலீடு
செய்யலாம்.”
தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் “ஏமாற்றத்தை அல்ல
சினத்தை” தூண்டி விட்டிருப்பதாக அவர் எச்சரித்தார் மற்றும்
ஹோலண்ட் நிர்வாகம் அதனை வேலைகளை உருவாக்கும் நடவடிக்கை என்று பொய்யாக
முன்வைப்பது திருப்பித்தாக்கும் நடவடிக்கை என்றும் கூறினார்:
”தொழிலாளர்கள் நிரந்தர அச்சுறுத்தலை எதிர்கொள்வர், நிறுவனங்கள்
திரிக்கப்பட்ட போட்டியை எதிர்கொள்ளும்… (மற்றும்) இது வேலைகளை
உருவாக்கும் என்று நீங்கள் நம்பச்செய்வீர்களா? தொழிலாளர்கள் மீதான
வேலைநீக்கங்களுக்கு எதிராக பாதுகாப்புக்களை வெட்டிக்குறைப்பது நிச்சயமாக
மேலும் நிறைய வேலைநீக்கங்களை உருவாக்கும்!”
அவரது சொந்த கட்சியின் துரோகத்தனமான மற்றும் பிற்போக்கு
பாத்திரத்தின் இந்த நியாயமான அழிவுகரமான தொகுப்பினை வரிசைப்படுத்திவிட்டு,
ஓப்ரி எச்சரித்தார்: “சமூகப் பிரச்சினைகள், உலகரீதியான மனித
உரிமைகள், அதிகாரங்களை சமன்செய்தல் மீதான குறிக்கோள்கள் மற்றும்
மதிப்புக்கள் – நாளுக்குநாள், அதன் அடிப்படைக் கோட்பாடுகளும்
அடித்தளங்களும் கீழறுக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சோசலிசத்தின்
குறிக்கோள்களில் என்ன மீதம் இருக்கப்போகின்றது?”
உண்மையில், ஓப்ரி கருத்துரைகள் கூறுவது யாதெனில்
பிரான்சிலும், ஐரோப்பாவில் பெரும்பாலான பகுதிகளிலும் உள்ள உத்தியோகபூர்வ
வட்டாரங்களில் பல பத்தாண்டுகளாக மேலாதிக்கம் செய்திருந்த சோசலிசத்தின்
கருத்துரு என்பது —அதாவது, முதலாளித்துவத்தின் கீழ்
முதலாளித்துவ அரசியல்வாதிகளால் தொழிலாள வர்க்கத்திற்கு குரோதமாக
மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள் என்ற வகையில்— அது மோசடியும்
பொய்யும் ஆகும். 1960 களின் இறுதியில் PS ஐ அமைப்பதற்கு ஒன்று சேர்ந்து
வந்த அரசியல் சக்திகளின் மிக ஆழமான பண்பு அம்பலப்பட்டுக்கொண்டு வருகிறது.
PS இல் அணிவகுத்த நபர்கள், விச்சி ஆட்சியுடன்
பிணைக்கப்பட்டு இருந்த பழைய முதலாளித்துவ ரடிக்கல் கட்சியினர், முதலாவது
PS ஜனாதிபதியான பிரான்சுவா மித்திரோன் போன்றவர்கள்; ஓப்ரியின் தந்தை
Jacques Delors போன்ற சமூக-கத்தோலிக்க கூறுகள்; அல்ஜீரியாவில் தங்களது
போரால் செல்வாக்கிழந்த வேர்க்கர்ஸ் இண்டர்நேஷனலின் பிரெஞ்சுப் பகுதியின்
(SFIO) பழைய சமூக ஜனநாயக நபர்கள்; மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (PSU) இல்
இருந்த சிற்றறிவு கொண்ட சமூக ஜனநாயகவாதிகள், முன்னாள் ட்ரொட்ஸ்கிஸ்டுகள்,
முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள் முதலியோர் ஆவர்.
தசாப்தங்களாக, PS பிரான்சை ஆட்சிசெய்து, பொருளாதார
சிக்கனக் கொள்கைகளை, போரை நடத்தி, இந்த சக்திகள் தொழிலாள வர்க்கத்தால்
சமூக சமத்துவத்திற்காக தலைமை தாங்கப்பட்ட புரட்சிகர போராட்டத்தின்
வெளிப்பாடாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட சோசலிசம்
பற்றிய மார்க்சிச கருத்துருவை இழிவுபடுத்த என்னவெல்லாம் முடியுமோ அவற்றை
செய்தனர். ஆயினும், 1930களின் மாபெரும் பொருளாதாரத் தாழ்விற்குப் பின்னர்
ஆழமடைந்த பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அது இப்பொழுது பிரஜாஉரிமை
பறித்தல் போன்ற இழிவான கொள்கைகளை புனருத்தாரணம் செய்ய முற்படுவதால் PS அது
தங்கியிருந்த பழைய அரசியல் சமநிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது.
சோசலிசம் பற்றிய அம்மையாரது தவறான கருத்துருவை ஹோலண்ட்
“குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டார்” என்று ஓப்ரி
அக்கறை கொள்வாராயின், அது, PS மற்றும் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் உள்ள
அவர்களின் கூட்டாளிகளுக்கான எதிர்ப்பில் பரந்துபட்ட தொழிலாளர்கள்
முதலாளித்துவத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்திற்கு ஆதரவாக
திரும்புவதற்கான நிலைமைகள் வெளிப்பட்டு வருகின்றன என்பதாலாகும்.
|